இந்த குபேர பொம்மையை வீட்டில் வைத்திருந்தால் பண கஷ்டம் வரத்தான் செய்யும். வீட்டில் வைக்கக்கூடாத குபேர பொம்மை எது, என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

குபேர பொம்மையை நம்முடைய வீட்டில் வைப்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் கிடையாது. இருப்பினும் சிலருக்கு, சில குபேர பொம்மைகள் அதிர்ஷ்டம் தராது என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் வைக்க வேண்டிய குபேர பொம்மை எது? பண பரிமாற்றம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் வைக்க வேண்டிய பொம்மை எது? குறிப்பாக சமையல் அறையில் வைக்க வேண்டிய குபேர பொம்மை எது? என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவலை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பலவகைப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் சின்னச் சின்ன மாற்றங்களை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நிச்சயமாக பணக்கஷ்டம் தீர நிறையவே வாய்ப்பு உள்ளது. சரி, பதிவுக்கு செல்வோமா?

guberar3

பொதுவாகவே, அதிர்ஷ்டம் தரும் குபேர பொம்மை என்றால் அது அமர்ந்துகொண்டு, சிரிக்கும் குபேர பொம்மை தான். தன்னுடைய தோள்களில் பணப் பையை மாட்டிக்கொண்டு, வாய்நிறைய சிரிப்போடு நிறைவாக அமர்ந்திருக்கும் குபேர பொம்மையை, நம்முடைய வீட்டில் தென்மேற்கு பகுதியில் வைத்து, வடகிழக்கை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

உங்களுக்கு இப்படிப்பட்ட திசைகளை எல்லாம் பார்த்து பொம்மையை வைக்க தெரியாது என்றால், சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் குபேர சிலையை உங்களுடைய வீட்டு வாசலை பார்த்தவாறு வைக்க வேண்டும். வீட்டிற்கு வரும் மகாலட்சுமியை உள்ளே அழைக்கும் வகையில் குபேரர் அமர்ந்திருப்பார்.

guberar

அடுத்தபடியாக சில வீடுகளில் குபேரரை நிற்கும்படி வைத்திருப்பார்கள். நிற்கும் குபேரர் இருக்கும் இடத்தில் பணம் வருவதும் போவதுமாக இருக்குமே தவிர, பணம் தங்காது. இந்த நிற்கின்ற குபேரரை எந்த இடத்தில் வைக்கலாம்? பணபரிமாற்றம் அதிகமாக இருக்கக்கூடிய, நிதி சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் இடத்தில் வைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு பினான்ஸ் கம்பனி, வட்டி கடை வைத்திருப்பவர்கள், இந்த பொம்மையை, அந்த இடத்தில் வைப்பது அதிகப்படியான லாபத்தை கொடுக்கும்.

- Advertisement -

சில குபேரர் குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். நீண்ட நாட்களாக குழந்தையில்லாதவர்கள் இந்த குபேரரை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். அப்படி இல்லை என்றால், அவர்களுடைய வீட்டில் அடிக்கடி பார்க்கும் இடத்தில் வைத்துவிட்டு, அந்த பொம்மையை பார்த்துக் கொண்டே இருந்தாலும் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

guberar1

இறுதியாக கையை மேலே தூக்கி வைத்திருக்கும் குபேர பொம்மையை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த குபேர பொம்மையை உங்களுடைய வீட்டு சமையலறையில் வையுங்கள். நீங்கள் சமைக்கும் சமையல் ருசியாக இருக்கும். அதோடு சேர்த்து உங்கள் வீட்டில் தன தான்யத்திற்க்கு பஞ்சமே இருக்காது.

guberar

உணவு சம்பந்தப்பட்ட தொழில் வைத்திருக்கும் இடத்தில் கையை மேலே உயர்த்தி வைத்திருக்கும், இந்த குபேர பொம்மையை வைத்தால், அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உணவு பொருட்கள் விற்கும் கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடையில் கூட இந்த பொம்மையை வைக்கலாம். உங்களுக்கு குபேர பொம்மை பிடிக்குமென்றால், குபேர பொம்மையின் மூலம் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடிக்கும் பட்சத்தில் உங்களை தேடி லக் வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே! எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அந்த 2 பொருள் என்னென்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.