ராகுல் மற்றும் பாண்டியா-க்கு பதிலாக ஆஸ்திரேலிய பறந்த இரண்டு வீரர்கள் இவர்கள்தான்

rahul-pand

சென்ற வாரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் அணிவீரர்களான ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவரும் சர்ச்சையில் சிக்கி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரிலும் அவர்களை நீக்கியது இந்திய அணி.

gill 1

தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் சரியான விளக்கம் கொடுக்கும் வரை அணியில் அவர்களது இடம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் உலகக்கோப்பை நெருங்கும் நிலையில் இது முடிவுகள் இந்திய அணிக்கும் சற்று பின்னடைவே ஏனெனில் இருவரும் சிறந்த வீரர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது இவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடரில் இணையும் வீரர்களை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ராகுலின் இடத்தில் சுபமான் கில் அணியில் இணைய உள்ளார். உள்ளூர் போட்டிகளிலும் ரஞ்சி போட்டிகளிலும் தொடர்ந்து தன் திறமையினை நிரூபித்து வருவதால் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

vijay

பாண்டியாக்கு பதிலாக தமிழக ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கர் அணியில் இணைய உள்ளார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் உள்ளவர் என்பது குறிபிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி 15ஆம் தேதி துவங்குகிறது.

இதையும் படிக்கலாமே :

மைதானத்தில் ஒரு ரசிகனாக ரோஹித்தின் ஆட்டத்தை ரசித்தேன் -ஆஸி அதிரடி வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்