மைதானத்தில் ஒரு ரசிகனாக ரோஹித்தின் ஆட்டத்தை ரசித்தேன் -ஆஸி அதிரடி வீரர்

rohith-and-ms

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் சிட்னி நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னிலை பெற்றது.

rohith-s

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் 15ஆம் மெல்போர்ன் நகரில் உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர். பயிற்சி முடித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

நாங்கள் தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தை தொடர விரும்புகிறோம். மேலும் கோலி ஒரு அபாயகரமான வீரர் என்றாலும் அவரை மட்டுமே நாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை. ஓப்பனரான ரோஹித் சர்மாவையும் நாங்கள் குறி வைத்துள்ளோம். ஏனெனில் அவர் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை திருப்பக்கூடியவர்.

rohith

முதல் போட்டியில் கூட அவரது பேட்டிங் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. ஒரு ரசிகராக அவரது பேட்டிங்கை நான் ரசித்தேன. அவருடைய பேட்டிங் ஸ்டைல் ரொம்ப எளிமையானது போல் இருந்தாலும் அடிக்கும் சிக்ஸர் நீண்ட தூரம் சென்று விழுகிறது. எனவே இனிவரும் ஆட்டங்களில் அவரை விரைவில் வீழ்த்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

தந்தையுடன் மைதானத்தில் அன்பை பகிர்ந்த சென்னை சி.எஸ்.கே அதிரடி வீரரின் மகன் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்