உலககோப்பை போட்டிகளுக்கு முன் இந்தியாவிற்கு கிடைத்த அடுத்த சூப்பர் ஸ்டார் – கங்குலி

ganguly

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியுடனான முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி போட்டிகளிலும் பெற்று தொடரை கைப்பற்றியது.

toss

இந்நிலையில், கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது இடத்தில் களமிறங்க இந்திய அணியின் இளம் வீரரான கில்-க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோர் உலககோப்பையின் துணை கேப்டன் கில் என்பது குறிப்பிடத்தக்கது.

கில் குறித்து கங்குலி பேசியதாவது : கில் அபாரமான திறமை உள்ளவர் எனவே அவர் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. மேலும், அவர் ஆடிய சில போட்டிகளை நான் பார்த்துள்ளேன். அவரிடம் இருக்கும் நுட்பம் என்னை வியக்க வைக்கிறது. உலககோப்பைக்கு முன் அவருக்கு அணியில் இடம் கிடைத்தாலும் சீனியர் வீரர்கள் இருப்பதால் உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்காது.

gill 1

ஆனால், அதன் பிறகு அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கவேண்டும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான் என்று கங்குலி கூறினார். கில் கொல்கத்தா அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தோனி, கோலி, ரோஹித்தை தொடர்ந்து ஷமியின் பட்டபெயரினை வெளியிட்ட – சாஹல்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்