தோனி, கோலி, ரோஹித்தை தொடர்ந்து ஷமியின் பட்டபெயரினை வெளியிட்ட – சாஹல்

shami

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியுடனான முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

shami

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் சாஹல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியினை பேட்டி எடுக்கும் வீடியோ ஒன்றினை பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதில், சாஹல் முகமது ஷமியின் பட்டபெயரினை வைத்து இந்திய வீரர்கள் அழைப்பதை பதிவு செய்துள்ளார்.

அதில் சாஹல் பேசியபோது : ஷமி உங்களது பந்துவீச்சினை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால், உங்களது செல்லப்பெயரினை யாரும் கேள்வி பட்டிருக்கமாட்டார்கள். இப்போது அந்த பெயரினை நான் வெளியிடுகிறேன் லாலாஜி என்று ஷமியிடம் கூறினார். இதிலிருந்து ஷமியை இந்திய அணி வீரர்கள் லாலாஜி என்று பட்டபெயரினை வைத்து அழைப்பது முதல் முறையாக தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் வீரர்களுக்கு பல நிக் நேம் உள்ளது குறிப்பாக, தோனிக்கு கேப்டன் கூல், விராட் கோலிக்கு சீக்கு, சாஹல்க்கு வத்திப்பெட்டி, ரோஹித்க்கு ஹிட்மேன் என பல் பெயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

முதல் மூன்று போட்டிகளில் அடைந்த தோல்வி காரணமாக நியூசி அணி எடுத்த அதிரடி முடிவு -நியூசி அணி நிர்வாகம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்