அடுத்த இரு போட்டிகளுக்கு என் இடத்தில் இவரே இறங்க வேண்டும். என்னை விட மிகவும் திறமை வாய்ந்தவர் இவர்தான் – கிங் கோலி

virat-kohli

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடந்தது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் அணி முடிவெடுத்து களமிறங்கியது நியூசிலாந்து அணி அதன்படி விளையாடி 243 ரன்களை குவித்தது. அந்த அணியில் டெய்லர் 93 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார்.

team

அடுத்து ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. ரோஹித் 62 ரன்களும், கேப்டன் கோலி 60 ரன்கள் அடித்தனர். கார்த்திக் மற்றும் ராயுடு ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

பிறகு பேசிய கோலி : அடுத்த இரண்டு போட்டிகளில் எனக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் நான் அணியில் இருந்து இன்று விலகுகிறேன். அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ரோஹித் கேப்டனாக செயல்படுவார். மேலும் எனக்கு மாற்றாக அடுத்த இரண்டு ஆட்டங்களில் இளம் வீரரான கில் களமிறங்கலாம். அவரே என் இடத்தில ஆட சரியானவர் என்று நினைக்கிறேன்.

gill 1

மேலும், வலைப்பயிற்சியில் அவருடைய ஆட்டத்தை பார்த்தேன். 19 வயதில் என்ன திறமை அவரிடம் உள்ளது. அவரை ஒப்பிடுகையில் நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அவரிடம் உள்ள திறமையில் எனக்கு கால்வாசி அளவு கூட இல்லை என்றே நான் கூறுவேன். மேலும், இன்றோடு நான் அணியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்துவீச இந்திய அணி வீரருக்கு வாழ்நாள் தடை – ஐ.சி.சி அதிரடி முடிவு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்