வீட்டிலேயே இஞ்சி வளர்க்கணும்னு ஆசை உங்களுக்கு இருக்கா? அப்படின்னா 5 நிமிஷம் இத படிச்சு பாருங்க!

ginger-plant2

நம் சமையலறையில் முக்கியம் வாய்ந்த பல பொருட்களில், இஞ்சிற்க்கு முதலிடம் உண்டு என்று சொன்னால், கட்டாயம் அது பொய்யாகாது. இஞ்சியை 10 ரூபாய் கொடுத்து சுலபமாக கடைகளிலிருந்து வாங்கி விடலாம். எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும் ஒரு பொருளாக இஞ்சி இருந்தாலும், நம் வீட்டிலேயே இஞ்சை விளைய வைத்து, அதைப் பயன்படுத்துவதில் நமக்கு கட்டாயம் அதிக மனநிறைவு இருக்கும். ஆனால் மற்ற செடிகளை போன்று இஞ்சி செடியை வைத்தோம்! வளர்த்தோம்! என்று குறைந்த நாட்களில் அறுவடை செய்ய முடியாது. இஞ்சி வளர்வதற்கு ஆறிலிருந்து ஏழு மாதங்கள் எடுக்கும். ஆனால் இதை வளர்ப்பதற்கு பெரிதாக சிரமப்பட வேண்டாம். நீங்க செடியை வைத்து விட்டீர்கள் என்றால், அதுதான வளரும். இஞ்சி வளர்க்க என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ginger 3-compressed

இஞ்சி வளர்ப்பதற்கு ஒரு அகலமான தொட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். கடையில் இருந்து தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடைந்த வாட்டர் கேன் இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த தொட்டியில் சிவப்பு மண் – 1 கப், மண்புழு உரம் ஒரு – 1 கப்,  வெள்ளை மணல் – 2 கப், தேங்காய் நார் துகள் – 1 கப். இந்த அளவில் மண் கலவையை சேர்க்க வேண்டும். கலவை இறுக்கமாக இருக்கக்கூடாது. தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைந்தால் போல்  இருந்தால், அதனுள் எந்த செடியும், வேரூன்றி வளராது என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீரில் ஈரப்பதம் சரியான அளவில் இருக்க வேண்டும். மண் உதிரியாக இருக்க வேண்டும். எல்லா வகையான செடிகளுக்கும், மண் இருக்கமாக, இருக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

soil-pot

சரியான விகிதத்தில் மண் கலவையை சேர்த்து, தண்ணீரை தெளித்து விடுங்கள். உங்களுடைய தொட்டியில் தேவையற்ற தண்ணீர் வெளியேறுவதற்கு ஓட்டை சரியான முறையில் இருக்கவேண்டும். அதை ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியை சிறிய துண்டு அளவு வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இஞ்சி துண்டை, கண் பகுதி இருக்குமாறு எடுத்துக்கொள்ளுங்கள். (கண் பகுதி என்றால் இஞ்சியில், சிறிய சிறிய கொம்புகள் பக்கவாட்டில், குட்டி குட்டியாக முளைத்திருக்கும் அல்லவா, அதுதான்.) அந்த இஞ்சி துண்டில், வெட்டிய பகுதியானது, மண்ணில் ஊன்றிய படியும், இஞ்சியின் கண் பகுதி மேலே பார்த்தவாறு இருக்கும் படி, மண்ணில் லேசாக புதைத்து வைத்தாலே போதும். இரண்டு விரல்களை வைத்து இஞ்சியை மண்ணில் அழுத்தம் கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான்.

ginger-plant-growing

நீங்கள் வெட்டிய பகுதி மண்ணில் புதைந்து இருக்கவேண்டும். லேசாக, மேலே இஞ்சியின் கணு புலப்பட வேண்டும் அவ்வளவுதான். மேலே லேசாக தண்ணீர் தெளித்து விட்டு விடுங்கள். இரண்டே வாரத்தில் இஞ்சின் வளர்ச்சியை நீங்கள் காணலாம். உங்களது தொட்டி அகலம் குறைவாக இருந்தால், வெறும் இரண்டு இஞ்சியை மட்டும் விதையுங்கள். அப்போதுதான் மண்ணிற்குள் காலியான இடம் இருக்கும். நன்றாக வளரும்.

ginger-plant

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், இஞ்சி செடியானது, பகல் நேரங்களில் சூரிய ஒளியில் நேராகவே இருக்க வேண்டும். நிழலில் இருக்கக்கூடாது. இஞ்சி செடி வளர்க்கக்கூடிய மண், அதிக தண்ணீர் விட்டு கெட்டியாகவும் இருக்கக் கூடாது. தண்ணீரில்லாமல் வறட்சியாகவும் இருக்கக் கூடாது. இதை இரண்டை மட்டும் சரிவர கவனித்துக் கொள்ளுங்கள்.

ginger-plant1

முற்றிய இஞ்சி கிடைக்க 8 மாதங்கள் எடுக்கும். இளசான இஞ்சி வேண்டும் என்றால், 6வது மாதம் அறுவடை செய்துகொள்ளலாம். நீங்க நட்டு வச்ச இரண்டு குட்டி இஞ்சி, உங்களுக்கு எவ்வளவு இஞ்சியை தரும் என்பதை, நீங்கள் இஞ்சியை விதைத்து, வளர்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் ஒருமுறை உங்கள் வீட்டுத் தொட்டியில் இஞ்சியை வைத்து தான் பாருங்களேன்!

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு பாத்ரூம் டைல்ஸை ஒரே நிமிஷத்தில் சுத்தம் செய்துவிடலாம். இது போட்டு சுத்தம் செய்தால், டைல்ஸில் தண்ணிர் ஊற்றினாலும் வழுக்காது!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to grow ginger at home in Tamil. Ginger plant growing. How to grow ginger at home. Ginger plant growing in Tamil. How to grow ginger at home without seeds.