தாயின் செயலுக்கு சிறுமி உணர்த்திய பாடம் – குட்டி கதை

girl
- Advertisement -

ஒரு ஊரில் தாய், தந்தை ஒரு பெண் குழந்தை என ஒரு அழகிய குடும்பம் வசித்து வந்தது. அன்பும் பண்பும் நிறைந்த அந்த குழந்தைக்கு இரண்டு வயதே முடிந்திருந்தது. தாயும் தந்தையும் தான் தன்னுடைய உலகம் என்று எப்போதும் அவர்களையே சுற்றிவந்தால் அந்த அழகிய சிறுமி.

girl

ஒரு நாள் அந்த சிறுமி தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள் பழத்தை வைத்திருந்தால். சிறுமியிடம் விளையாடிக்கொண்டிருந்த தாய், என் செல்லமே உன்னிடம் தான் இரண்டு ஆப்பிள் இருக்கிறதே அதில் ஒன்றை எனக்கு தருவாயா என்று சிரித்துக்கொண்டே கேட்டால்.

- Advertisement -

சில நொடிகள் யோசித்த அந்த குழந்தை ஒரு ஆப்பிளை கடித்தது அதன் பின் இன்னொரு ஆப்பிளையும் கடித்தது. இதை கண்ட தாயின் முகம் வாடியது. இவள் தான் நம் உலகம் என்று வாழ்கிறோம் ஆனால் இவளுக்கோ ஒரு ஆப்பிளை கூட நமக்கு தர மனம் இல்லையே என்று வருதினால். ஆனால் அதை அவள் குழந்தையிடம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

Appleஇரண்டு ஆப்பிளையும் கடித்து சுவைத்த அந்த குழந்தை ஒரு ஆப்பிளை தன் தாயிடம் நீட்டி இந்த ஆப்பிள் தான் ருசியாக உள்ளது அம்மா. இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றால். அந்த தாய்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கண்களில் நீர் பொங்கியது. உடனே அந்த குழந்தையை அணைத்து முத்தமிட்டாள்.

mother

இதையும் படிக்கலாமே:
சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா ?

- Advertisement -

நீதி:
நாம் பெரிய அறிவாளிகளாக இருக்கலாம், அனுபவம் மிக்கவர்களாக இருக்கலாம் ஆனால் அடுத்தவரின் குணத்தை பற்றி யூகிக்கும் முன்பு கால அவகாசம் எடுத்து நிதானமாக யோசித்து கணிக்கவேண்டும். மேலோட்டமாக ஒருவரை பற்றி கணிப்பது பல நேரங்களில் தவறாகவே இருக்கும்.

இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மிக தகவல்களுக்கு தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

- Advertisement -