சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா ?

0
2579
sivan sani

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏன் கடவுளும் கூட சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் சிவபெருமானை சனிபகவான் பிடித்த அந்த சம்பவத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

sani-bagavaan

சனிபகவான் தேவலோகத்தை நோக்கி விரைந்து செல்கிறார். இதை கண்ட தேவர்கள் அனைவரும் ஐயோ சனி இன்று யாரை பிடிக்க போகிறாரோ என்று அஞ்சி ஓட்டம் பிடிக்க ஆரமிக்கின்றனர். அவரவர் ஒரு இடத்திற்கு சென்று ஒளிந்துகொள்கின்றனர். ஆனால் சனிபகவானோ தேவலோகத்தை கடந்து செல்கிறார். இதை கண்ட தேவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.

தாங்கள் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியில் வந்த தேவர்கள், சனி எங்கு தான் செல்கிறார் என்பதை அறிய அவரை பின்தொடர்கின்றனர். சனியோ கைலாயத்தை நோக்கி விரைந்து செல்கிறார். சனிவருவதை அறிந்த சிவபெருமான் தன்னை தான் அவர் பிடிக்க போகிறார் என்பதை ஊகித்து அவர் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிய இடம் தேடுகிறார்.

sivan

திருமாலின் வழிகாட்டுதல் பேரில் அவர் ஒரு குகையில் சென்று மறைந்து கொண்டு அதன் வாசலை மூடிவிடுகிறார். அதன் பின் அவர் தியானத்தில் அமர்ந்துவிடுகிறார். சில வருடங்களாக அவர் தியானத்திலேயே இருக்கிறார். பின் ஒருநாள் குகையில் இருந்து சிவபெருமான் வெளியில் வருகிறார். அங்கு சனிபகவான் அவருக்காக காத்திருக்கிறார்.

sani-bagavaan

சிவபெருமான் சிரித்துக்கொண்டே பார்த்தாயா சனி உன் பிடியில் இருந்து நான் தப்பித்துவிட்டேன் நீ என்னை பிடிக்கும் காலம் கடந்துவிட்டது என்றார். சனியோ, சுவாமி நான் உங்களை முன்பே பிடித்துவிட்டேன். நீங்கள் என் பிடியில் இருந்ததால் தான் ஏழரை ஆண்டுகளாக பார்வதி தேவியை கூட பார்க்க முடியாமல் இந்த குகையில் நீங்கள் இருந்தீர்கள் என்றார்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் – 2017 to 2020

சனி கூறியதை கேட்டு வியந்த சிவபெருமான், இறைவன் என்றும் பாராமல் நீ உன் கடமையை சரிவர செய்ததால் ஈஸ்வரன் என்னும் என்னுடைய பெயரை உனக்கு பட்டமாக தருகிறேன். இன்று முதல் உன்னை எல்லோரும் சனீஸ்வரன் என்று அழைப்பர் என வாழ்த்துகிறார்.

இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் சிறு கதைகளை உடனுக்கூட பெற தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.