தக்காளியுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து முகத்தில் போட்டு பாருங்க! கன்னம் இரண்டும் மூன்றே நாட்களில் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

face4

பெண்கள் சிரிக்கும் போது அப்படியே அவர்களுடைய அந்த இரண்டு கன்னமும் பளபளப்பாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நம்மில் பல பேருக்கு அந்த ஆசை இருக்கும். கொஞ்சம் ஜொலிஜொலிக்கும் சருமம் உடையவர்களை, பார்த்தால் அதே போல் நமக்கும் அழகான கன்னங்கள் வராதா என்ற ஏக்கம் கட்டாயம் எல்லோருக்கும் வரும். இதற்கு அதிக செலவு செய்து எந்த ஒரு கிரீமையும் வாங்கி நம்முடைய முகத்தில் பூசிக் கொள்ள வேண்டாம். சுலபமாக இயற்கையாக நம் வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை போதும். அது என்னென்ன பொருட்கள், அதை முகத்தில் எப்படி அப்ளை செய்தால் மூன்று நாட்களில் நல்ல பலன்களை பெறலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

face1

தக்காளி பழச்சாறு, அரிசி மாவு, தேன் இந்த 3 பொருட்கள் போதும். தக்காளிப் பழத்தைக் கையில் நன்றாக பிழிந்துதான் சாறு தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுக்க கூடாது. தக்காளி சாறு தேவையான அளவு, 1 ஸ்பூன் அரிசி மாவு, 1/2 ஸ்பூன் தேன், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கிரீம் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

தயார் செய்து வைத்திருக்கும் இந்த க்ரீமை முதலில் உங்களுடைய விரல்களில் தொட்டு உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து நன்றாக ஸ்கரப் செய்து ஒரு முறை கழுவி விடுங்கள். அதன் பின்பு இதே கிரீமை முகத்தில் திக்காக பேஸ்ட் போல அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே உலர வைத்து விடுங்கள்.

அது நன்றாகக் காய்ந்ததும் உங்களுடைய கைகளை தண்ணீரில் தொட்டு முகத்தை நனைத்து மீண்டும் ஒருமுறை மசாஜ் செய்து, மீண்டும் பத்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். மொத்தமாக 20 நிமிடங்கள் உங்களுடைய முகத்தில் இந்த கிரீம் இருக்க வேண்டும்.

மூன்று நாட்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும். காலை ஒரு முறை மாலை ஒரு முறை. மூன்றாவது நாள் கழித்து உங்களுடைய முகத்தில் இருக்கும் வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம். நிச்சயமாக glowing skin என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த பளபளக்கும் சருமம் உங்களுடைய முகத்திற்கும் நிச்சயமாக கிடைத்திருக்கும்.

நீங்கள் மாநிறமாக இருப்பவர்கள் ஆக இருந்தாலும், ஒரு நேச்சுரல் க்ளோ கிடைக்கும். நீங்கள் மூன்று நாட்கள் கழித்து ஏதாவது பார்ட்டிக்கு அல்லது திருமணத்திற்கு வெளியே செல்ல வேண்டும் என்றால், மூன்று நாட்களுக்கு முன்பே இதை செய்து கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அதன் பின்பு இந்த ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்துவது. தினமும் இந்த ஃபேஸ் பேக் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு நாள் இப்படி செய்தால் போதும். தினமும் இப்படி செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ட்ரை பண்ணி பாருங்க.