ஞாயிற்றுக்கிழமை இது நடந்தால் கஷ்டங்கள் எல்லாம் உங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறப் போகிறது என்று அர்த்தம். எதிர்பாராத யோகத்தை தரும் அந்த நல்ல சகுனம் என்ன?

cow
- Advertisement -

ஒருவருடைய வாழ்வில் கெட்டது நடக்க வேண்டும் என்றால் அது உடனடியாக நடந்து விடுகிறது. அதுவே ஒருவருடைய வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில நாட்கள் காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும். நல்லது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. கடவுள் அப்படித்தான் ஒரு வரையறையை இந்த பூலோகத்தில் வகுத்து வைத்திருக்கின்றான் போல. அந்த வரிசையில் நமக்கு வரக்கூடிய கெட்டதை தடுத்து நிறுத்த, நல்லதை சீக்கிரம் நடத்திக் கொள்ள, ஒரு சில பரிகாரங்களையும் நமக்காக நம்முடைய முன்னோர்கள் கொடுத்துள்ளார்கள். அது நிறைய இருக்கிறது. அதில் ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு விஷயத்தை தொடங்கினால், அது நாய்ப்படாத பாடாக இருக்கும் என்று சொல்லித்தானே நமக்கு பழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் இந்த விஷயத்தை பின்பற்றி பாருங்கள். உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பசுமாடு இருக்கக்கூடிய இடத்திற்கு நீங்கள் போக வேண்டும். பசு மாட்டின் பின்பக்கத்தை சுத்தம் செய்து, கழுவி மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பசமாட்டிற்கு கொஞ்சமாக உதிரி பூவை போட்டு பசுமாட்டை பின்பக்கம் தொட்டு கண்களில் ஒற்றி வணங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு பசு மாட்டிற்கு உங்களுடைய கைகளால் கொஞ்சமாக பச்சரிசி மாவில் வெல்லத்தை கலந்து வாழையில் கொடுக்க வேண்டும். அப்படியே இதை தூக்கி போட்டுடாதீங்க. கடவுளுக்கு நிவேதனமாக படைப்பது போல இதை முழு பக்தியோடு செய்யுங்கள். பசு வாயில் அப்படியே சாப்பிட கொடுத்தால் கூட தவறு கிடையாது. ஆனால் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். பசு பயந்து உங்களை முட்டி விடக்கூடாது. அதில் கவனம் தேவை. அந்த பசுவுடன் பழகிய நபர் ஒருவர் உங்களுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை எத்தனை வாரங்கள் என்று கணக்கு வைத்து எல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது அந்த லட்சுமி தேவியே உங்கள் வீட்டிற்கு வந்து ஆசீர்வாதம் செய்வாள் என்றால் பாருங்கள்.

- Advertisement -

எப்படி என்றால் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள், அதாவது ஏதாவது ஒரு வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஏதோ ஒரு பசு வந்து உங்கள் வீட்டு வாசலில் சாணம் இடும். இந்த சகுனம் மட்டும் உங்களுக்கு நடந்து விட்டால், உங்களுடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாகவே பசு மாடு நம் வீட்டு வாசலில் வந்து சாணம் போட்டால் அது ரொம்ப நல்லது என்று சொல்வார்கள்.

அதிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று வந்து சாணம் போடுவது நமக்கு அதிகப்படியான நன்மையை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் பசுவை ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்தும் லட்சுமி கடாட்சத்தை நிறைவாக பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -