புதிய வீட்டிற்கு குடியேறுபவர்கள் இந்த 1 பொருளை கொண்டு சென்றால் கோடீஸ்வரர் ஆவது உறுதி தெரியுமா?

milk-thennampillai

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு புதிதாக குடியேறுபவர்கள் மங்களகரமான பொருட்களை உடன் எடுத்துக் கொண்டு செல்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். அது வாடகை வீடாக இருந்தாலும் கூட ஒவ்வொரு வீட்டை மாற்றும் பொழுதும் முதலில் அடுப்பில் பால் காய்ச்சி பொங்கவிட்டு பின்னர் மங்கல பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்து விட்டு தான் அதன் பின்னர் வீட்டு பொருட்களை கொண்டு வந்து இறக்குவது சம்பிரதாய நடைமுறை.

milk

அது போல புதிதாக ஒரு வீடு கட்டி குடியேற நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். வீடு என்பது சாதாரண விஷயமல்ல. நாம் வாழும் வீட்டை மாற்றினால், நம்முடைய வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதை பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அப்படியே வீட்டில் புதிதாக குடியேறும் பொழுது நிச்சயம் அந்த வீட்டில் கணபதி ஹோமம் செய்து இருக்க வேண்டும்.

பூமி, மனை என்பது உயிர் ஆற்றல் கொண்டது. பல புண்ணிய ஆத்மாக்களுக்கு அந்த இடத்தின் மேல் உரிமை இருக்கும். அவர்களின் மனம் கோணாமல் அந்த மண்ணில் வாஸ்துபடி சிறப்பாக வீடு கட்டி குடியேறி விட்டால் அதற்கு அப்புறம் நம்முடைய வாழ்க்கையும் ஓஹோவென்று மாறிவிடும்.

homam

புதிதாக வீடு கட்டி குடியேறுபவர்கள், நீங்கள் பழைய வீட்டில் இருந்து நேரடியாக சொல்லாமல் கோவிலிலிருந்து புது வீட்டிற்கு செல்வது உத்தமம். மங்கலமான பூஜைப் பொருட்களுடன், நவதானியங்கள் போன்ற சில ஆன்மீக பொருட்களையும் எடுத்துக் கொண்டு கோவிலிலிருந்து புறப்பட்டு, புதுமனை வீட்டிற்கு செல்வது மிகவும் நல்லது. அப்படி செல்லும் பொழுது இந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுத்து சென்று பாருங்கள் உங்களை யாராலும் வெல்ல முடியாத ராஜயோகம் கிடைக்கும். அப்படியான ரகசிய பொருள் என்ன என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

புதிதாக வீடு கட்டி குடியேற நினைப்பவர்கள் தாங்கள் மட்டும் அல்லாது தங்களுடைய வம்சாவளியினரும், அடுத்தடுத்த சந்ததியினரும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ ஆசைப்படுவது உண்டு. வம்சம் தழைத்தோங்க அந்த வீட்டில் வாழை மரத்தை நடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். வீட்டிற்கு பின்னால் வாழை கன்று நட்டு வளர்த்து வந்தால், வாழையடி வாழையாய் வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்.

vazhai-kandru

அது போல கோவிலிலிருந்து சிறிய அளவிலான தென்னம் பிள்ளையை புதிய வீட்டிற்கு கொண்டு சென்று நட்டு வைத்து வளர்த்து வருவது ராஜ யோகத்தை உண்டாக்கும். தென்னம்பிள்ளை எந்த அளவிற்கு ஓங்கி உயர்ந்து காய்களை காய்த்து உங்களுக்கு கொடுக்கிறதோ! அந்த அளவிற்கு உங்களுடைய செல்வ வளமும் அதிகரிக்கும். அந்த காலத்தில் எல்லாம் புதிதாக வீடு கட்டுபவர்கள் தென்னம்பிள்ளை இல்லாமல் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள்.

thennampillai-coconut-tree

தென்னம்பிள்ளை கொண்டு சென்று பின்னர் அந்த வீட்டில் இருக்கும் காலியான இடத்தில் முதலில் கொண்டு போய் நட வேண்டும். தென்னை மரத்தின் வேர் பெரிதாக அனைத்து இடங்களிலும் படர்வது இல்லை. இருப்பினும் சுவற்றின் ஓரமாக தென்னம் பிள்ளையை எப்போதும் நடவு செய்யக் கூடாது. மத்திமமான இடத்தில் நட்டு வளர்ப்பது யோகத்தை உண்டாக்கும். இனி புது வீட்டிற்கு சென்றால் இதை கொண்டு செல்ல மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
அதிர்ஷ்ட லட்சுமிக்கே உங்கள் பீரோவில் நிரந்தரமாக தங்க ஆசை வந்துவிடும். இந்த ஒரு படத்தை, உங்கள் வீட்டு பீரோவில் ஒட்டி வைத்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.