ரோட்டுக்கடை காலி ஃபிளவர் சில்லியில் மசாலா உதிராமல் மொறுமொறுவென வருவதற்கு ரகசிய காரணம் இதுதானா? நீங்களும் மிஸ் பண்ணாம இந்த டிப்ஸ் தெரிஞ்சு வச்சிக்கோங்க.

gopi-chilli
- Advertisement -

பொதுவாகவே காலிபிளவர் சில்லி என்றால் அதை நம்முடைய வீட்டில் செய்தால் பக்குவமாக சரியாக வராது. ரோட்டு கடைகளில், எக்ஸிபிஷன், ஹோட்டலில் சாப்பிடும் போது அதன் சுவை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். இப்படி ஒரு சுவையில் நம்முடைய வீட்டிலும் காலிபிளவர் சில்லி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி செய்தாலே போதும். கடைகளில் கிடைக்கக் கூடிய அதே சுவை, நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய சில்லியிலும் கட்டாயம் கிடைக்கும். கடையில் காய்ந்த எண்ணெயிலேயே மீண்டும் மீண்டும் சில்லியை பொரித்துக் கொடுப்பார்கள். அது குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி ஆரோக்கியத்திற்கு சரியானது அல்ல. சரி, ரோட்டு கடை காலிபிளவர் சீக்ரெட்டை இப்பவே பார்த்திடலாம் வாங்க!

gopi-chill1i

காலிபிளவர் சில்லி செய்ய தேவையான பொருட்கள்:
காலிபிளவர் – 250 கிராம், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், சிக்கன் சில்லி 65 அல்லது மட்டன் சில்லி மசாலா – 2 ஸ்பூன், கான்பிளவர் மாவு – 3 ஸ்பூன், கடலை மாவு – 4 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் கலர் பவுடர் – 1/2 ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம். (உங்களுடைய வீட்டில் பஜ்ஜி மாவு இருந்தால் அதை காலிபிளவரோடு சேர்க்கலாம். பஜ்ஜி மாவு இல்லாதபட்சத்தில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, அரிசி மாவு இந்த மூன்று பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.)

- Advertisement -

முதலில் காலிபிளவரை கொஞ்சம் தண்டு பகுதிகளோடு வெட்டி சுடுதண்ணீரில் போட்டு, 5 செகண்டில் சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாமல் காலிபிளவரை சில்லி போட்டாலும் காலிபிளவர் சில்லி சரியாக வராது. சுடு தண்ணீரில் அதிக நேரம் போட்டு ஊற வைத்து கழுவினாலும் காலிபிளவர் சில்லி மொறுமொறுவென வராது.

gopi-chill2i

வெந்நீரில் இருந்து எடுத்த காலிஃப்ளவரை தண்ணீரை எல்லாம் வடிகட்டிவிட்டு, ஒரு அகலமான பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், சில்லி சிக்கன் 65 பவுடர், பஜ்ஜி மாவு எலுமிச்சை பழச்சாறு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து, நன்றாக பவுலை கையில் எடுத்து மேலும் கீழுமாக குலுக்கி விட வேண்டும்.

- Advertisement -

மாவு காலிஃப்ளவரில் ஒட்டாததுபோலவே தெரியும். ஆனாலும் இந்த இடத்தில் தண்ணீர் தெளித்து மசாலாக்களை காலிபிளவரோடு ஒட்ட வைக்க கூடாது. 2 நிமிடங்கள் நன்றாக குலுக்கி விட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்பு உங்கள் கைகளைக் கொண்டு காலிபிளவர் உடையாமல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பிசையும் போது, காலிபிளவரில் லேசாக தண்ணீர் விடும். மசாலாக்கள் அனைத்தும் அந்தத் தண்ணீரிலேயே காலிபிளவரோடு நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

gopi-chill3i

இறுதியாக இந்த காலிஃப்ளவரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, நன்றாக பிரட்டி விட வேண்டும். நல்லெண்ணெய் ஆக ஊற்றினால் நல்லது. காலிபிளவரில் எண்ணெய் சேர்த்து செய்யும் போது காலிபிளவர் மொறுமொறுவென வரும். மசாலாக்கள் காலிபிளவரோடு நன்றாக சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எண்ணெயை ஊற்றி நன்றாக பிரட்டி காலிபிளவரை 20 நிமிடங்கள், மூடி போட்டு அப்படியே ஊற வைத்து, அதன் பின்பு 5 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து சில்லி போட்டு பாருங்கள்!

- Advertisement -

gopi-chill6i

கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, அதன் பின்பு சில்லியை போட்டு எடுக்க வேண்டும். போட்டோவுடன் சில்லி கடையில் ஒட்டிக்கொள்ள தான் செய்யும். ஒரு பணியார குச்சியை வைத்து திருப்பி காலிஃப்ளவரை பக்குவமாக வேக வைத்து எடுத்தால், ரோட்டுகடை சுவையில் காலிபிளவர் சில்லி தயார்.

gopi-chill7i

முடிந்தவரை இதை டிஷ்யூ பேப்பரில் போட்டு விட்டு அதன் பின்பு பரிமாறுங்கள். கட்டாயமாக கொஞ்சம் எண்ணெய் குடிக்கத்தான் செய்யும். காலி பிளவர் மசாலா தடவி விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தேவைப்படும் போது எடுத்து சூடாக பொரித்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
சுவைமிகுந்த ஹோட்டலில் செய்யும் ‘பூரி மசாலா’ வீட்டிலும் 5 நிமிடத்தில் எப்படி செய்வது? என்பதைப் பற்றிய ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -