சுவைமிகுந்த ஹோட்டலில் செய்யும் ‘பூரி மசாலா’ வீட்டிலும் 5 நிமிடத்தில் எப்படி செய்வது? என்பதைப் பற்றிய ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

poori-masala--wheat

பூரி என்றாலே நமக்கு ‘உருளைக்கிழங்கு மசாலா’ தான் ஞாபகத்திற்கு வரும். வேறு எந்த ஒரு சைடிஷும் பூரிக்கு உகந்ததாக இருக்காது. உருளைக்கிழங்கு மசாலா வைத்து பூரி கொடுத்தால் எத்தனை வேண்டுமானாலும் தின்று கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் வீட்டில் என்ன தான் உருளைக்கிழங்கு அவித்து மசாலா வைத்தாலும், அதில் அந்த அளவிற்கு சுவை இருக்காது. ஆனால் ஓட்டலில் கொடுக்கும் பூரி மசாலா நாவூறும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதிலிருக்கும் சூட்சமம் தான் என்ன? இந்த ரகசிய குறிப்பை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Masala

ஹோட்டல் ஸ்டைல் ‘உருளைக்கிழங்கு மசாலா’ செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 2

சோம்பு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
இஞ்சி – அரை இன்ச்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2

potato-urulai

மஞ்சள் தூள் – 1/4
பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவிற்கு
உருளைக்கிழங்கை 250 கிராம்
கோதுமை மாவு – 1 ஸ்பூன்
தக்காளி-1

- Advertisement -

ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் உருளைக்கிழங்கை கழுவி இரண்டாக வெட்டி குக்கரில் சுத்தமான தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை விட்டு அவித்து எடுக்க வேண்டும். நன்கு ஆறியதும் தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை சிறிதளவு தண்ணீரில் நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை நசுக்கி அல்லது சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். தாளிக்க தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Urulai kizhangu

ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியதும் கடுகு, கறிவேப்பிலை, பட்டை, லவங்கம், சோம்பு, சீரகம், நறுக்கிய இஞ்சி என்று வரிசையாக சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அவற்றுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியதும் அதில் சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இவைகள் வதங்கியவுடன் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். கோதுமை மாவினுடைய பச்சை வாசம் போனதும் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்குகளை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கி நறுக்கிய மல்லித்தழைகளை தூவி மாற வேண்டியது தான். பூரிக்கு ஏற்ற அட்டகாசமான ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா வீட்டிலும் செய்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
எவ்வளவோ ட்ரை பண்ணாலும் பூரி மட்டும் ஹோட்டலில் செய்வது போல் புஸ்சுன்னு வரலையா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.