உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது தெய்வங்கள்.

astro

அந்த இறைவனை மனிதர்கள் பல வகையில் வழிபடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு பிடித்த இஷ்ட தெய்வம், குல தெய்வம், பரிகாரத்திற்கு வழிபடக்கூடிய தெய்வங்கள் இப்படி பல வகைகள் உண்டு. இருந்தாலும் தனிமனிதனுக்கு என்று ஒரு ராசி உண்டு. 12 ராசிக்கும் தனித்தனியாக கிரகங்கள் உண்டு. அந்த கிரகங்களை ஆளும் தெய்வங்களும் உண்டு. இப்படி உங்கள் ராசிக்கு என்ன தெய்வம் என்பதை தெரிந்துகொண்டு அந்த தெய்வத்தை ஒரு நாளைக்கு ஒரு நிமிடமாவது உங்கள் மனதார நினைத்து, வீட்டிலேயே வழிபட்டால் போதும். உங்கள் வாழ்வில் ஏற்படும் சங்கடங்களானது சுலபமாக விலகிவிடும். உங்களின் ராசிக்கான கிரகம் எது? தெய்வம் எது? என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Astrology

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் பலத்தை பெறுவதற்கு அந்த முருகனின் ஆசியைப் பெற வேண்டும். முருகனின் ஆசியைப் பெற வேண்டுமென்றால் அந்த சிவனையும் வழிபட வேண்டும். பிரதோஷ வழிபாடு மிகவும் சிறந்தது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் பலத்தை பெறுவதற்கு அந்த மகா லட்சுமியை வணங்க வேண்டும். மகாலட்சுமியை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளும் போது உங்கள் மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.

mahalakshmi

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதனின் பலத்தை பெறுவதற்கு நாராயணனை வழிபட வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்று ஒருமுறை நினைத்தால் போதும் உங்கள் சங்கடங்கள் நீங்கி விடும்.

- Advertisement -

கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திரனின் பலத்தை பெற வேண்டுமென்றால் அம்மன் வழிபாட்டில் அதிகமாக ஈடுபட வேண்டும். அந்த சந்திரனை வானில் தரிசிக்கும்போது மனதார வணங்குவது நன்மைதரும்.

siva

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் பலத்தை பெற வேண்டுமென்றால் சிவனை மனதார வணங்க வேண்டும். சிவ சிவ, ஓம் நமசிவாய என்ற வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நல்ல பலன்பெறலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதனின் பலத்தை பெறுவதற்கு நாராயணனை மனதார நினைத்து வழிபட வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்னும் மந்திரம் நல்ல பலனைக் கொடுக்கும்.

Sudarshana vishnu

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் பலத்தைப் பெற மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். மகாலட்சுமி வணங்குவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாயின் பலத்தை பெறுவதற்கு, சிவபெருமானையும் முருகனையும் வழிபடுவது நன்மை தரும். பிரதோஷ வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும்.

Guru Dhatchinamurthy

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குருவின் பலத்தை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். உங்கள் வேலையில் உங்களுக்கு யார் குருவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசியாளர்கள் சனியின் பலத்தை பெறுவதற்கு சனிபகவானின் குருவான பைரவரை வழிபடுவது சிறப்பான பலனை தரும். சிவபெருமானையும் நினைத்து வழிபடலாம்.

Sani Astrology

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனியின் பலத்தை பெறுவதற்கு சிவபெருமானையும் முருகனையும் வழிபட வேண்டும். பிரதோஷ வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் குருவின் பலத்தை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தியை வணங்குவது நன்மை தரும். நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு குருவாக இருப்பவர்களுக்கு நல்ல மதிப்பு தருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் யாரென்று உங்களின் கட்டை விரல் கூறி விடும் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have 12 Rasiku dheivangal in Tamil. 12 Rasi jothidam Tamil. Rasikuriya dheivangal in Tamil. Goddess for 12 zodiac in Tamil.