கோதுமை தோசையை ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்களேன்! மொறுமொறுன்னு சூப்பரா இருக்கும். 5 நிமிஷத்துல சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் ரெடி!

wheat-dosa
- Advertisement -

கோதுமை தோசை என்றாலே, கோதுமை மாவில் கொஞ்சம் உப்பை போட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்து கெட்டியாக தோசைக்கல்லில் பிசுபிசுவென்று ஒட்டி, இப்படித்தான் செய்வோம். பெரும்பாலும் இதை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு மசாலா பொருட்களை சேர்த்து ஒரு கோதுமை தோசையை மொறுமொறுவென்று ஐந்தே நிமிடத்தில் எப்படி செய்யப் போகிறோம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

wheat-dosa1

Step 1:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு 1 அளவு கோதுமை மாவு போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 1/4 கப் அரிசி மாவு சேர்த்து, தேவையான உப்பையும் போட்டு, உங்கள் கைகளால் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். ஒரு கப் அளவு கோதுமை மாவில் 3 கப், அளவு தண்ணீர் விட்டு கோதுமை மாவை கட்டி இல்லாமல் முதலில் நன்றாக கரைத்து விடுங்கள்.

- Advertisement -

Step 2:
கரைத்து வைத்திருக்கும் இந்த கோதுமை மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, சீரகம் 1/4 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன், மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கரைத்து விட்டு, மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

wheat-dosa2

Step 3:
அடுத்தபடியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து விட்டு, நன்றாக சூடு ஆன பின்பு, எண்ணெய் தொட்டு வெங்காயத்தால், நன்றாக தோசை அல்லை துடைத்து விடுங்கள். அதன் பின்பு தயாராக இருக்கும் மாவை பெரிய குழிக் கரண்டியால் எடுத்து, தோசை கல்லை சுற்றி ஊற்றி விட வேண்டும். மாவு தோசை போல ஊற்றி எல்லாம் தேக்க முடியாது.  கட்டாயம் தோசை வராது.

- Advertisement -

மாவை நீங்கள் தோசைக்கல்லில் பரவலாக ஊற்றும் போது, ஓட்டை ஓட்டையாக தோசை மாறும். அதன் பின்பு தோசையின் மேல் நன்றாக எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று சிவக்க வைத்து எடுத்தால், சூப்பரான தோசை ரெடி. சைடிஷ் கூட தேவைப்படாது. அப்படியே சாப்பிட்டு விடலாம். ஆரோக்கியமான டிபன் கூட இது.

wheat-dosa3

பின்குறிப்பு: இந்த மாவில் துருவிய இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய் தூளுக்கு பதிலாக சில்லி ஃப்ளேக்ஸ் என்று சொல்லுவார்கள் அல்லவா, அதை அரை ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வர மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக அடித்து, அதில் இருந்த அரை ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் புளிப்பு சுவைக்காக ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறும் விடலாம். இப்படியாக உங்களுடைய சுவைக்கு ஏற்ப இந்த தோசையை சுலபமான முறையில் செய்து சாப்பிடுங்கள்.

இதையும் படிக்கலாமே
கும்பகோணம் கடப்பா! எப்படி செய்யறதுன்னு இன்னைக்கு தெரிஞ்சுக்கலாமா? இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, எல்லாத்துக்கும் ஒரு சூப்பர் சைட் டிஷ் இது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -