ரோஜா செடியில் பூக்கள் உதிராமல் கொத்துக்கொத்தாக பூக்க நீங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் இந்த 1 பொருள் போதுமே!

rose-peanut
- Advertisement -

ரோஜா செடியை வளர்ப்பதற்கு அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும். முதன் முதலில் செடி வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருப்பவர்களுக்கு கூட அவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் செடி வகை ரோஜாவாக தான் இருக்கும். அந்த அளவிற்கு ரோஜா மற்றவர்களின் மனம் கவர்ந்த செடியாக காட்சி தருகிறது. இத்தகைய ரோஜா செடியை முறையாக பராமரிப்பு செய்யாவிட்டால் இதனை வளர்ப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக மாறிவிடும். முறையாக பராமரிப்பு செய்தால் இவ்வளவு ஈசியா? இது தெரியாமல் போச்சே! என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவிற்கு ரோஜா செடியை வளர்ப்பது மிகவும் சுலபமான விஷயம் தான். அதன் ரகசியங்களை இப்பதிவில் இனி பார்ப்போமா?

rose

நீங்கள் முதல் முதலாக ரோஜா செடியை வளர்க்க விரும்புபவர்களாக இருந்தால் அல்லது ஏற்கனவே ரோஜா செடி வைத்திருப்பவர்கள் அதில் சரியாக பூக்கள் பூக்கவில்லை என்ற குறையோடு இருந்தால் இப்படி முயற்சி செய்து பாருங்கள். ரோஜா செடி சாதாரண மண் கலவையில் நிறைய பூக்கள் பூப்பதில்லை. அதற்கு தேவையான ஊட்டச்சத்துகளையும், உரத்தையும் போட வேண்டும்.

- Advertisement -

90% இதற்கு உரிய பராமரிப்பை நாம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் சில பொருட்களை வைத்தே செய்து விட முடியும். ஆனால் மீதமிருக்கும் 10% உரம் சேர்க்க வேண்டும். ரோஜா செடியை பொறுத்தவரை மண்புழு உரம் சிறந்த உரமாக இருக்கும். உங்களுடைய மண்ணுடன் மண்புழு உரத்தையும் சேர்த்து ரோஜா செடி பதியம் போடுங்கள். இதனால் வேருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து செடிகள் செழிப்பாக வளரும்.

manpuzhu-uram

நீங்கள் வீட்டில் ரோஜா செடிகளுக்கான உகந்த சத்துக்கள் நிறைந்த நிறைய பொருட்களை வீணாகக் குப்பையில் தூக்கி எறிகிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் உண்மை அது தான். நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீயில் ஆரம்பித்து, இடையிடையே சிறிது பழங்கள், நொறுக்குத் தீனிகள் என்று தொடர்ந்து சாப்பிடும் முட்டை வரை அனைத்துமே உரங்கள் தான். டீ தூள் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியாமல் ரோஜா செடிக்கு உரமாக போடலாம்.

- Advertisement -

பழவகைகளை வீணாக தூக்கி எறியாமல் அதன் தோல்களை கூட உரமாக்கி ரோஜா செடிகளுக்கு போடலாம். முட்டை ஓட்டை காய வைத்து பொடியாக்கி அதையும் ரோஜா செடிக்கு உரமாக போட்டால் நன்கு செழித்து வளரும். இவைகள் ஒவ்வொன்றிலும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவ்வகையில் வேர்கடலையின் தோலை மிகச் சிறந்த ஊட்டசத்தாக ரோஜா செடிக்கு இருக்கிறது.

peanut

நீங்கள் வேர்க்கடலை அவித்து சாப்பிடும் பொழுது அதனை வேக வைத்த நீரை வீணாக கீழே தூக்கி ஊற்றாமல் வேர்க்கடலையின் தோலை அதிலேயே ஊற வைத்து ஆறிய பின் ரோஜா செடிகளுக்கு ஊட்டசத்து டானிக்காக சிறிது சிறிதாக ஊற்றி வரலாம். இதில் இருக்கும் கால்சியம், ஐயர்ன், மெக்னீசியம் ரோஜா செடிகள் நிறைய பூக்கள் பூக்க, உதிராமல் தடுக்கவும், கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கவும் துணை புரிகின்றது.

- Advertisement -

எந்த வகையான உரம் அல்லது டானிக் நீங்கள் ரோஜா செடிக்கு ஊட்டுவதாக இருந்தாலும் அதை வேர்ப்பகுதியில் மண் ஈரப்பதம் தக்க வைத்துக் கொள்ளும் படியாக லேசாக ஊற்றினால் போதும். நிறைய ஊற்றினால் செடிகள் அழுகி போக வாய்ப்புகள் உள்ளது. எந்த வகை செடி ஆனாலும் உனக்கு மண் கலவை காற்றோட்டமாக உதிரி உதிரியாக இருப்பது அவசியமாகும்.

rose

ரோஜா செடியை பொருத்தவரை அதன் காய்ந்த பகுதிகளை அடிக்கடி வெட்டி விடுவது தான் சிறந்த பராமரிப்பாக இருக்கும். அவ்வ போது வெட்டிவிட்டு அழகாக பராமரித்து வாருங்கள் உங்கள் வீட்டு ரோஜா செடியில் கொத்துக் கொத்தாக பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு தினந்தோறும் நீங்கள் விரும்பிய பூக்களை வாரி வழங்கும் என்பதை கூறி பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இயற்கையை மறந்ததால் வந்த விளைவுகள் என்னென்ன தெரியுமா? உலக அழிவின் ஆரம்பம் இது தானா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -