கோதுமை மாவை வைத்து ஒருமுறை இப்படி இட்லி செய்து பாருங்கள்.

godhumai idly
- Advertisement -

நம்முடைய வீட்டில் எப்பொழுதும் காலையிலும், இரவிலும் டிபன் செய்வோம். அதுவும் வயதானவர்கள் இருக்கும் வீட்டில் இரவு நேரத்தில் கோதுமை மாவை பயன்படுத்தி ஏதாவது ஒரு டிபனை செய்து தர வேண்டும் என்று சொல்வார்கள். அவ்வாறு கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சப்பாத்தி, கோதுமை தோசை என்றுதான் செய்வோம். அதற்கு பதிலாக கோதுமை மாவை வைத்து இட்லி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கோதுமையில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நார்ச்சத்து மிகவும் துணை புரிவதால் தான் இரவு நேரத்தில் கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – 2 கப்
  • கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – 1 இன்ச் அளவு
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • கேரட் – 1
  • கொத்தமல்லி – சிறிது
  • சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தயிர் – 1/2 கப்
  • தண்ணீர் – 1 1/2 கப்
  • சமையல் சோடா – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். கடாய் சிறிது சூடானதும் அதில் கோதுமை மாவை சேர்த்து வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு இந்த மாவை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விட வேண்டும். அடுத்ததாக மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு கடலை பருப்பையும், உளுந்தம் பருப்பையும் அதில் சேர்க்க வேண்டும்.

இவை இரண்டும் நன்றாக சிவந்த பிறகு கடுகு, சீரகம் இரண்டையும் சேர்க்க வேண்டும். கடுகு நன்றாக பொரிந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு கருவேப்பிலையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு துருவிய கேரட்டை அதில் சேர்த்து வதக்க வேண்டும். கேரட் நிறம் மாறியதும் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஆற வைத்திருந்த வருத்த கோதுமை மாவை சேர்க்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். பிறகு சமையல் சோடாவை சேர்க்க வேண்டும். அடுத்ததாக புளிக்காத தயிரை சேர்க்க வேண்டும். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு கட்டி இல்லாமல் பிணைந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் வதக்கி வைத்திருக்கும் பொருட்களை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

இப்பொழுது கோதுமை இட்லி மாவு தயாராகிவிட்டது. அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இட்லி தட்டில் கோதுமை மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா இந்த ஆப்கானி பன்னீர் கறி செஞ்சு கொடுங்க அட்டகாசமா இருக்கும்.

சுவையான கோதுமை இட்லி 10 நிமிடம் கழித்து தயாராகிவிடும். இதற்கு நாம் எப்போதும் போல் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி என்று அனைத்து வகையான சட்னிகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -