சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா இந்த ஆப்கானி பன்னீர் கறி செஞ்சு கொடுங்க அட்டகாசமா இருக்கும்.

afgani paneer recipe
- Advertisement -

பன்னீர் வைத்து பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அதுவும் அசைவம் சாப்பிடாத நாட்களில் பன்னீர் வைத்து சமைக்கும் எந்த உணவாகட்டும் ஒரு அசைவ சுவையிலே இருக்கும் இத்துடன் இது உடலுக்கும் நல்லதும் கூட அப்படியான ஒரு பன்னீர் வைத்து சூப்பரான ஒரு கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்
தயிர் – 5 டேபிள் ஸ்பூன் வெங்காயம் மீடியம் சைஸ் -2
பச்சை மிளகாய் – 5
பூண்டு- 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
முந்திரி – 10
புதினா – 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு( விழுது) – 1/2 அரை டீஸ்பூன்
தனியாத் தூள்- 1 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை கிராம்பு லவங்கம் ஏலக்காய் – தலா 2

- Advertisement -

செய்முறை

முதலில் பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தயிர், கரம் மசாலா, அரை ஸ்பூன் மிளகுத் தூள், கொஞ்சம் உப்பு அனைத்தையும் சேர்த்து கலந்து பத்து நிமிடம் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சி, பூண்டு, முந்திரி, பச்சை மிளகாய், கொத்தா மல்லி, புதினா இவை அனைத்தையும் சேர்த்து வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து இதை ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் ஆற வைத்த பொருட்களை சேர்த்து மீதம் இருக்கும் தயிரையும் சேர்த்து ஃபைன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றிய பிறகு ஊற வைத்த பன்னீரை மிதமான தீயில் இரண்டு புறமும் சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொரிந்த உடன் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து தனியா தூள், கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சைவப் பிரியர்களுக்கு பலாக்காயில் அட்டகாசமான பிரியாணி ரெசிபி.

அதன் பிறகு வறுத்து வைத்த பன்னீரை இதில் சேர்த்த பின்பு கடைசியாக கஸ்தூரி மேத்தி தூவி ஒரு முறை நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான ஆப்கானிப் பன்னீர் கறி தயார்.

- Advertisement -