- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும் பத்தே நிமிஷத்துல ரொம்ப சூப்பரான, கிறிஸ்பியான ஈவினிங்...

ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும் பத்தே நிமிஷத்துல ரொம்ப சூப்பரான, கிறிஸ்பியான ஈவினிங் டீ டைம் ஸ்நாக்ஸ் ரெடி.

- Advertisement -

நம்மில் பெரும்பாலும் ஈவினிங் டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. அதற்காக நாம் அடிக்கடி செய்வது வடை, பஜ்ஜி போன்றவை தான். இந்த பதிவில் கோதுமை மாவை வைத்து ஒரு சுவையான வடையை எப்படி ரொம்ப சுலபமா செய்வது என்பதை தான் பார்க்க போகிறோம். இது பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கூட ஸ்நாக்ஸாக செய்ய கூடிய ஒரு சிம்பிள் ரெசிபி தான். அந்த வாங்க இது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1, கப் அரிசி – மாவு – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் -2, கரம் மசாலா -1/4 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை,கொத்தமல்லி – 1 கைப்பிடி, எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

செய்முறை

கோதுமை மாவு வடை செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்த பிறகு உப்பு, கரம் மசாலா, மிளகாய்த்தூள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் வெங்காயத்துடன் இவை அனைத்தும் நன்றாக கலக்கும் படி பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த வெங்காயத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முதலில் தண்ணீர் ஊற்றாமல் வெங்காயத்தில் இருக்கும் தண்ணீரிலே கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்தால் போதும். இந்த மாவு கையில் எடுத்து உருண்டை பிடித்தால் கெட்டியாக வர வேண்டும். அந்த அளவிற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். இப்படி பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டி ஒரு பிளேட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அடுப்பை மிதமான தீயிக்கு மாற்றி, தட்டி வைத்த வடைகளை ஒவ்வொன்றாக போட்டு இரண்டு புறமும் திருப்பி போட்டு முக்கால் பதம் வந்தவுடன் எடுத்து தனியாக வைத்து விடுங்கள்.

இப்போது மறுபடியும் எண்ணெயை ஒரு முறை நன்றாக காய விட்டு மிதமான தீக்கு மாற்றி, ஏற்கனவே பொரித்து வைத்த வடைகளை இன்னொரு முறை போட்டு சிவந்து வந்தவுடன் எடுத்து விடுங்கள். இப்படி செய்யும் போது வடை ரொம்ப கிரிஸ்பியாவும் சாப்பிட அதிக ருசியாகவும் இருக்கும். இப்படி செய்தால் எண்ணெய் அதிகம் குடிக்கும் என்று பயப்பட தேவை இல்லை.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு பாசிப்பருப்பை வச்சு மணக்க மணக்க இப்படி சாம்பார் செஞ்சு பாருங்க. இட்லி தோசை காலி ஆகுதோ இல்லையோ சாம்பார் காலி ஆகிடும்.

இந்த சிம்பிளான கோதுமை வெங்காய வடையை நீங்களும் உங்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து பாருங்கள். திரும்பத் திரும்ப செய்ய சொல்லி கேட்பார்கள்.

சற்று முன்