- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இட்லி, தோசைக்கு பாசிப்பருப்பை வச்சு மணக்க மணக்க இப்படி சாம்பார் செஞ்சு பாருங்க. இட்லி தோசை...

இட்லி, தோசைக்கு பாசிப்பருப்பை வச்சு மணக்க மணக்க இப்படி சாம்பார் செஞ்சு பாருங்க. இட்லி தோசை காலி ஆகுதோ இல்லையோ சாம்பார் காலி ஆகிடும்.

- Advertisement -

இட்லி தோசைக்கு சட்னி, சாம்பார், வடகறி பல வகையான சைடு டிஷ் கள் இருந்தாலும் கூட பாசிப்பருப்பு வைத்து செய்யப்படும் இந்த டிபன் சாம்பார் இருந்தால் போதும், எத்தனை இட்லி வைத்தாலும் பத்தாது. அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அப்படி ஒரு சுவையான பாசிப்பருப்பு சாம்பார் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த சாம்பார் செய்ய முதலில் 1/2 கப் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த பாசிப்பருப்பை நன்றாக அலசிய பிறகு இதை ஒரு குக்கரில் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பாசிப்பருப்பில் 10 பல் பூண்டு, 4 பச்சை மிளகாய், 3 நல்ல பழுத்த தக்காளி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள், அனைத்தையும் சேர்த்த பிறகு பருப்பு, தக்காளி எல்லாம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இந்த சாம்பாருக்கு மசாலா அரைத்துக் கொள்ளலாம். அதற்கு 1/2 கப் பருப்பிற்கு 1/2 கப் தேங்காவை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் 1/2 டீஸ்பூன் சோம்பு இரண்டையும் நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து அதில் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு 1/2 ஸ்பூன்,1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக பொரிந்த பிறகு 10 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 1 கொத்து கருவேப்பிலை, 1 பச்சை மிளகாய், இவை அனைத்தையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிய பிறகு அரைத்து வைத்த தேங்காய் சோம்பு விழுதையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

இது நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் போதே வேக வைத்த பருப்பை லேசாக மத்து வைத்து கடைந்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் இந்த பருப்பை சேர்த்து அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இது அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கொதிக்கும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லியை பொடியாக அரிந்து அதையும் தூவி கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு மூடி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: சாதம், கலவை சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டுக்க ஆரோக்கியமான பச்சைப் பயறு கிரேவி 10 நிமிஷத்துல ஈஸியாக செம டேஸ்டாக இப்படி கூட செய்யலாமா? இது தெரிஞ்சா அடிக்கடி செஞ்சிருப்பேனே!

இப்போது இந்த பாசிப்பருப்பு சாம்பாரை சுட சுட இட்லி மீது ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அமிர்தமாக இருக்கும். இது தோசை, சாதம் என அனைத்திற்கும் கூட மிகவும் நன்றாக இருக்கும்.

சற்று முன்