19/8/2022 வெள்ளிக்கிழமையில் கோகுலாஷ்டமி வருகிறது! கிருஷ்ண ஜெயந்தியில் செய்ய வேண்டியது என்னென்ன? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

krishna-foot-gokulastami
- Advertisement -

சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆவணி மாதம் 19/8/2022 இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வர இருக்கிறது. கிருஷ்ணன் பிறந்த இந்நாளை கோகுலாஷ்டமி என்று கூறுவார்கள். கோகுலத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் வழங்கப்படுகிறது. பொதுவாக அஷ்டமி மற்றும் நவமி ஆகிய திதிகளில் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். கோகுலாஷ்டமி சிறப்புகள் என்னென்ன? அன்றைய நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக அஷ்டமி மற்றும் நவமி என்றாலே அசுப திதிகள் ஆக கருதப்படுகிறது. ஆனால் கிருஷ்ணர் அஷ்டமி திதியில் பிறந்து கோகுலாஷ்டமி என்கிற நல்ல நாளை வழங்கியதும், அதே மாதிரி ராமர் நவமி திதியில் பிறந்து ராமநவமி என்கிற நல்ல நாளை வழங்கியதும் இந்த திதிகள் மற்ற திதிகளை போலவே சுப திதிகள் ஆக கருதப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

- Advertisement -

தென்னிந்திய மக்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக ஆங்காங்கே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பல்வேறு பெயர்களில், பல்வேறு விழாக்களாக அவரவரின் சாஸ்திரங்களின்படி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து கிருஷ்ணருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைத்து வழிபட்டு வந்தால் கிருஷ்ணரே வந்து அந்த வீட்டில் பிறப்பதாக ஐதீகம் உண்டு.

குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இந்த கோகுலாஷ்டமி சிறந்த பலன்களை நல்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தியை சூரியன் மறைந்த பிறகு இரவு நேரங்களில் கொண்டாடுவது ரொம்பவும் சிறப்பானதாக இருந்து வருகிறது. அன்றைய நாளில் பகவத் கீதை வாசிப்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பகவத் கீதை கலியுகத்திற்கு இறைவன் கொடுத்த கொடையாகும். பகவத் கீதையின் படி ஒரு மனிதன் வாழ்ந்து வந்தால் அவனுக்கு தோல்வி என்பதே இருக்காது. ஸ்ரீ கிருஷ்ணரை விக்ரஹமாகவோ, படமாகவோ வைத்து அலங்காரங்கள் சிறப்பாக செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

புகழ், செல்வம், பிள்ளை வரம், பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு, நிர்வாக திறமை, அறிவாற்றல் அனைத்திலும் சிறந்து விளங்க கோகுலாஷ்டமியில் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணை, பால், நெய், திரட்டு பால், பழங்கள், முறுக்கு, சீடை, அப்பம், தட்டை, அவல் லட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றை படைப்பார்கள். கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக அன்றைய நாளில் வீடு முழுவதும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். அரிசி மாவால் வாசற்படியில் ஆரம்பித்து பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானை சென்றடையும் வரை அவருடைய திருபாதங்களை வரைய வேண்டும்.

இதற்காக அரிசி மாவை குழைத்து உங்களுடைய வலது கையை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின்னர் அதன் பக்கவாட்டு பகுதியை அரிசி மாவில் நனைத்து வைத்தால் கால் விரல் போல அழகாக பதியும். பிறகு விரலால் மாவை தொட்டு கிருஷ்ணருடைய விரல்களை வரையுங்கள். இது பார்ப்பதற்கே அழகாக இருக்கும். பாத சுவடுகளை வரைந்த பின்னர் பூஜைகளை துவங்க வேண்டும். பின்னர் பகவத் கீதை வாசிப்பது, கிருஷ்ண புராணம், கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் போன்றவற்றை உச்சரிக்க வேண்டும். இவருடைய புராணத்தை கோகுலாஷ்டமி அன்று படிப்பவர்களுக்கும், அதை காதால் கேட்பவர்களுக்கும் அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேரும் என்றும், நல்ல புத்தியும், ஒழுக்கமும் உண்டாகும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணரை உங்கள் வீட்டிலும் வரவேற்று மகிழலாமே!

- Advertisement -