- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கம் சேர பௌர்ணமி பரிகாரம்

தங்கம் சேர பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

முழு நிலவாக திகழக்கூடியது தான் பௌர்ணமி. அப்படிப்பட்ட பௌர்ணமி நாளன்று சந்திரனின் ஆதிக்கம் என்பது அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நமக்கு பல மடங்கு பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய தினம் பல ஆலயங்களில் விசேஷமான வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பௌர்ணமி தினத்தன்று நாம் செய்யக்கூடிய எளிமையான ஒரு பரிகாரம் தங்கத்தை அதிகளவில் நம் வீட்டில் சேர வைக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்கம் சேர பௌர்ணமி பரிகாரம்

பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தாய்மார்களும் தங்களுடைய குழந்தைகளுக்காக தேவையான அளவு தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும், அப்பொழுதுதான் அவர்களுடைய திருமணத்தில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது என்று நினைப்பதுண்டு. அதற்காகவே பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து தங்களால் இயன்ற அளவு தங்கத்தை அவ்வப்பொழுது வாங்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

- Advertisement -

பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கூட இந்த பழக்கத்தை கையாளுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் தங்கத்தை நாம் நினைக்கும் பொழுது பணமாக மாற்றிக் கொள்ள முடியும். தேவைப்படும் பொழுது அடமானத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பதற்காகவே அதை ஒரு சேமிப்பு நோக்கில் செய்பவர்களும் இருக்கிறார்கள். எப்படி நினைத்தாலும் தங்கத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்களுடைய மனதில் அதிகமாகவே இருக்கும்.

இப்படி கஷ்டப்பட்டு தங்கத்தை வாங்கி ஏதோ ஒரு சூழ்நிலையில் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டத்தின் காரணமாக அடமானத்தில் வைத்து அந்த அடமான நகையை திருப்ப வேண்டும் என்பதற்காக முயற்சி செய்பவர்கள் இருக்கிறார்கள். என்னதான் முயற்சி செய்தும் தங்களால் அந்த அடகு நகையை திருப்ப முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களும், புதிதாக தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் இந்த எளிமையான பௌர்ணமி பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை பௌர்ணமி தினத்தன்று இரவு தான் செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் நம் வீட்டில் இருக்கக் கூடிய தங்க காசுகளை போட்டு விட வேண்டும். பிறகு அந்த கிண்ணத்தை நிலவின் வெளிச்சம் படும்படி வைக்க வேண்டும். தங்கம் என்பது குருவின் அம்சமாக கருதப்படுகிறது. அன்று பௌர்ணமி நிலவின் வெளிச்சம் அதில் படுவதன் மூலம் சந்திர குரு யோகம் என்பது ஏற்படும்.

இப்படி சந்திரகுரு யோகம் ஏற்பட்டால் அவர்கள் வீட்டில் தங்க நகை சேர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இவ்வாறு இரவு முழுவதும் இந்தக் கிண்ணத்தை நிலவு ஒளியில் வைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நாணயத்தை எடுத்து எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். அதில் இருக்கக்கூடிய தண்ணீரை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிந்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பண தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பௌர்ணமி பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு சந்திரகுரு யோகம் ஏற்பட்டு அதிக அளவில் தங்க நகை சேர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்