உங்கள் ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை இருந்தால் அதிக தங்கம் சேரும் தெரியுமா?

gold

உலகில் இருக்கின்ற உலோகங்களில் எக்காலத்திலும் மதிப்புக் குறையாமல் இருப்பது தங்கம் தான். இத்தகைய தங்கத்தை நகையாக அணிந்து கொள்ளவும், எதிர்காலத்திற்கான சேமிப்பாக வைத்துக் கொள்ளவும் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு எப்போதும் மக்கள் தயாராக இருக்கின்றனர். அப்படி வாங்கப்படும் தங்கம் அனைவரிடமுமே நிரந்தரமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. ஜோதிட சாஸ்திரம் படி தங்க நகை சேமிப்பு யாருக்கெல்லாம் அதிகம் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Gold rate

ஜோதிட ரீதியாக பார்க்கும் பொது குரு எனப்படும் வியாழ பகவான் தான் தங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் நவகிரக அதிபதியாகத் திகழ்கிறார். இதன் காரணமாக தான் குரு பகவானுக்கு பொன்னன் என்ற ஒரு பெயரும் ஏற்பட்டது. தனுசு, மீனம் போன்ற ராசியில் பிறந்தவர்களுக்கும், குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்றிருந்தாலும் அந்த ஜாதகரிடம் எப்போதும் தங்கம் சிறிதளவாவது சேமிப்பில் இருக்கும்.

மேலும் குரு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் வீடுகள் ஏதேனும் ஒன்றிலும், லக்னத்திற்கு 1, 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானம் என்படும் வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் அந்த ஜாதகரின் வீட்டில் தங்கம் எப்போதும் வாசம் செய்யும்.

punrapoosam-guru

மேலும் ஜாதகத்தில் குரு கிரகம் புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சாரம் பெற்று இருந்தாலும் அடிக்கடி தங்கம் வாங்கும் யோகம் அந்த ஜாதகருக்கு உண்டு என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கு 5-ம் வீட்டில் உள்ள கிரகம் லக்னத்திற்கு 2-ம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2-ம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் தங்கம் அதிகம் வாங்குபவர்கவும், அந்த தங்கத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் எனவும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

- Advertisement -

Today Gold rate

ஒரு நபரின் ஜாதகத்தில் பாப கிரகமான ராகு, சுக கிரகமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் நட்பு பெற்ற வீட்டில் ராகு, சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அந்த ஜாதகருக்கு கூடுதல் வருமானம் மூலம் செல்வம், நகை சேமிப்பு பெருகும். இப்படிப்பட்ட கிரக அமைப்பை ஜாதகத்தில் உள்ளவர்கள் சேமிப்புச் சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும் ஆபரணங்களைப் வாங்கி சேர்க்கும் யோகமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான விகாரி ஆண்டின் பொது பலன்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Gold buying yogam in Tamil. It is also called as Thangam semippu in Tamil or Guru bhagavan in Tamil or Thangam sera in Tamil or Thangam veetil thanga in Tamil.