பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான விகாரி ஆண்டு பொது பலன்

vigari-varudam

காலநிலை மாற்றம் மற்றும் வானியல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள மக்கள் வருடங்களை கணக்கிடுகின்றனர். உலகிற்கே ஒளிதரும் சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு நமது தமிழ் முன்னோர்கள் ஆண்டுகளை கணக்கிட்டனர். அந்த வகையில் மொத்தம் 60 தமிழ் ஆண்டுகள் இருப்பதாக கணக்கிட்டு அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்தனர். இதில் 33 ஆவதாக வரும் தமிழ் ஆண்டுதான் “விகாரி ஆண்டு” ஆகும். இந்த விகாரி ஆண்டிற்கான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பொதுவான பலன் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Nakshatra

மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளில் 33 ஆவது தமிழ் ஆண்டாக விகாரி ஆண்டு வருகிறது. இந்த விகாரி ஆண்டு தூய தமிழில் எழில்மாறல் ஆண்டு என அழைக்கப்படுகிறது. விகாரி தமிழ் புத்தாண்டு14.04.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை தசமி திதியில், ஆயில்ய நட்சத்திரத்தில், கடக லக்னத்தில், சூரிய ஹோரை வேளையான பகல் 01.05 மணிக்கு பிறக்கிறது.

இந்த விகாரி ஆண்டின் பொதுவான கணிப்பு என்னவென்றால் இந்த ஆண்டில் உலகின் சில இடங்களில் கடுமையான நில நடுக்கங்கள் ஏற்படும். இயற்கை சீற்றங்களின் பாதிப்பு கடுமையாக இருக்கும். பங்குவர்த்தகம் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், ஆண்டின் இறுதியில் பங்கு வர்த்தகம் சீரான நிலையை பெறும். பாரத தேசத்தில் நல்ல ஆட்சி அமைந்து, மக்களை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கும்.

Rain

இந்த ஆண்டு புஷ்கர மேகம் நாட்டின் மேற்குப் பகுதியில் உற்பத்தியாவதால் மழைப்பொழிவு சராசரி அளவில் இருக்கும். சில இடங்களில் அதிகமான மழைப்பொழிவு, சில இடங்களில் மழை பொழிவே இல்லாத நிலையும் ஏற்படும். விவசாய உற்பத்தியில் சிறிது பாதிப்புகளை சந்திக்க கூடும். நாட்டின் பொருளாதார நிலை மேம்படும். மக்களிடம் பய உணர்வு அதிகம் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் பகை கொண்டு சண்டையிடும் நிலையே உலகெங்கிலும் காணப்படும் என பஞ்சாங்க பலன் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே:
இந்த ஆண்டு தொழிலில் மிகுந்த வருமானம் பெறும் ராசியினர் யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vihari varuda palangal in Tamil. It is also called as Tamil puthandu palangal in Tamil or Vihari varuda panchangam palangal in Tamil or Tamil varuda pirappu in Tamil or Tamil varudangal in Tamil.