தங்கத்தை பிரசாதமாக தரும் அறிய கோவில்

Gold temple
- Advertisement -

வழக்கமாக விபூதி குங்குமம் இப்படி தான் நாம் கோவில்களில் பிரசாதமாக பெற்றிருப்போம். சில நேரங்களில் பொங்கல் புளியோதரை இப்படி பல உணவு வகைகளும் பிரசாதமாக கிடைக்கும்.

அனால் மத்தியபிரதேச மாளித்தில் உள்ள மஹாலக்ஷ்மி கோவிலில் தங்கத்தை பிரசாதமாக தருகிறார்கள் . கேட்கவே ஆச்சர்யமாக உள்ளதா? வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

- Advertisement -

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காணிக்கையை பணமாக செலுத்துவதில்லை. மாறாக தங்கமாகவும் வெள்ளியாகவும் செலுத்துகின்றனர்.

இப்படி செலுத்தப்படும் காணிகளின் மதிப்பு வருடா வருடம் பல கோடியை தாண்டுகிறது. அந்த காணிகளில் இருந்து சில பகுதிகளை தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

- Advertisement -

இந்த தங்க பிரசாதம் தினம் தோரும் வழங்குவது கிடையாது. மாறாக வருடத்தில் தீபாவளி அன்று மட்டும் இது வழங்கப்படுகிறது.

இந்த தங்க பிரசாதத்தை வாங்க மக்கள் பல மயில் தூரம் கடந்து வருகின்றனர். இங்கு பிரசாதமாக தரப்படும் தங்கத்தை யாரும் வெறும் தங்கமாக பார்ப்பதில்லை. அதை இறைவனின் அருளாக பார்க்கின்றனர். அதோடு இந்த தங்கபிரசாதத்தை யாரும் விற்பது கிடையாது.

- Advertisement -