- Advertisement -

தங்கம் பெருக ரகசியம்

- Advertisement -

தங்கம் என்பது எல்லோரிடமும் தங்குவது கிடையாது. ஒரு சிலருக்கு அது அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு அந்த யோகமே கிட்டாமல் போகும். தங்க நகைகள் ஆசையாக வாங்கி வைத்தாலும், அதை நீண்ட நாட்களுக்கு போட்டு அழகு பார்க்க முடியாது, அதற்குள் அடகுக்கு சென்று விடும். இப்படி தங்கம் ஒருவரிடம் நிலையாக அதிகம் சேர்வதற்கு எந்த வழிமுறையை பின்பற்றுவது நல்லது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

தங்க நகைகளை போட்டு அழகு பார்க்க ஒரு தனி கொடுப்பணை வேணும் என்பார்கள். தங்கம் சிலரிடம் வாங்க வாங்க சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி அவர்களிடம் சேர என்ன காரணம்? தங்கம் பற்றிய சில சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் அறிவோமா? தங்கம் மகாலட்சுமியின் அம்சம். நாளும் கோளும் செய்யாதது நமக்கு வேறு யாரு செய்து விடப் போகிறார்கள்? சரியான காலத்தில் தங்க நகை வாங்குவதையும், அதை முறையாக பத்திரப்படுத்துவதையும் அறிந்து கொண்டால் தங்கம் உங்களை விட்டு எங்கும் செல்லாது.

- Advertisement -

மளமளவென்று தங்க நகைகள் சேர ஆரம்பிக்கும். வீட்டில் தங்கம் சேர்வதற்கு முதலில் தங்கத்தை சுக்கிர ஹோரை அல்லது குளிகை நேரத்தில் வாங்க வேண்டும். குளிகையில் ஒரு விஷயத்தை செய்தால், அது திரும்பத் திரும்ப நடக்கும் என்பார்கள். தங்க நகையை அந்த நேரத்தில் வாங்கினால், திரும்பத் திரும்ப நீங்கள் நகையை வாங்குவீர்கள். தங்க நகையை அடகு வைக்க செல்லும் பொழுதும், நேரத்தை பார்க்க வேண்டும். இல்லையேல் மீண்டும் மீண்டும் அந்த நகையானது அடகுக்கு போகும்.

மரணயோகம், அசுப ஹோரை, அஷ்டமி, நவமி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் எல்லாம் தங்க நகையை அடகு வைக்கவே கூடாது. இதெல்லாம் பார்க்காமல் நம்முடைய அவசர தேவைக்கு அடகு வைப்பதால் தான் அது மீண்டும் மீண்டும் அடகுக்கு செல்கிறது. சுப ஹோரையில் தங்க நகையை அடகு வைக்கலாம். குளிகையில் அடகு வைக்கக்கூடாது. அடகு வைத்த நகையை வீட்டிற்கு வந்ததும் நன்கு மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்பு, அதை பூஜை அறையில் முதலில் வைக்க வேண்டும். நீங்கள் அந்த தங்கத்தில் 2 இன்ச் நீளத்தில் சிகப்பு மெல்லிய நூலால் சுற்றி பின்பு எப்போதும் போல எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ, அந்த இடத்தில் வைத்து அதனுடன் ஒரு மஞ்சள் கிழங்கை சேர்த்து வையுங்கள். மீண்டும் அந்த நகை அடகிற்கு போகாது.

- Advertisement -

அது போல புதிதாக தங்க நகை வாங்குபவர்கள், நல்ல நேரத்தில் வாங்க வேண்டும். வாங்கிய நகைகளை பூஜை அறையில் வைத்து பிரார்த்தித்து, பின்பு ஒரு சிகப்பு வெல்வெட் துணி அல்லது கருநீல வெல்வட் துணியில் வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு மஞ்சள் நூலினால் அதனை கட்டி பீரோவில் மரப்பெட்டியில் வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:

மரப்பெட்டி இல்லாதவர்கள், பிளாஸ்டிக் டப்பாக்களிலும், நகை வாங்கும் பொழுது கொடுக்கப்பட்ட டப்பாக்களிலும் வைக்கலாம். இதனுடன் நான்கைந்து மாதுளை மர குச்சிகளை உடைத்து வந்து வையுங்கள், தங்கம் வேகமாக சேரும். மாதுளை மர குச்சி, நெல்லி மரக்குச்சி அல்லது மல்லிகை செடியின் குச்சி ஏதாவது ஒன்றை வைக்கலாம். இது மகாலட்சுமியின் அருள் தரக்கூடியது மற்றும் நகைகளை அதிகமாக வாங்க வைக்க கூடியது.

சற்று முன்