‘உங்களுடைய முகம் எப்படி இவ்வளவு தகதகன்னு பளபளப்பா மாறுச்சு’ என்று பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்பார்கள். கோல்டன் ஃபேஷியலே வேண்டாம். இப்படி செஞ்சு பாருங்க!

golden-facial
- Advertisement -

பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் தங்களுடைய முகம் பளபளப்பாக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக அடுத்தவர்கள் பார்த்து ‘உங்களுடைய முகம் எப்படி இவ்வளவு அழகாக இருக்கு? என்ன காரணம்.’ என்று கேட்டுவிட்டால் போதும். தாங்க முடியாத சந்தோஷம் நமக்கு வந்துவிடும். இது எல்லோருக்கும் உள்ள இயல்பு தான். ஆக, நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்க, முக அழகும் முக்கியம் தேவை. இதற்கு நம் வீட்டிலேயே குறைவான செலவில் கோல்டன் பேஸியல் எப்படி செய்து கொள்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

badam-powder4

இந்த கோல்டன் ஃபேஷியல் செய்வதற்கு பாதாம் பவுடர், தேன், பச்சை பால், இந்த 3 பொருட்கள் மட்டுமே போதும். முதலில் கடையிலிருந்து வாங்கிய பாதாமில் இருந்து 10 பாதாமை எடுத்து, முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலை அந்த பாதாமில் இருக்கும் தோலை உரித்து விட்டு, நன்றாக உலர வைத்து விட வேண்டும்.

- Advertisement -

உலர்ந்த இந்த பாதாமை, மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து, காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கண்ணாடி பவுலில் நீங்கள் பொடி செய்து வைத்திருக்கும் பாதாம் பொடியில் இருந்து 1 ஸ்பூன், சுத்தமான தேன் 1 ஸ்பூன், இவை இரண்டையும் போட்டு நன்றாக அடித்து கலக்க வேண்டும். அப்போதுதான் க்ரீமியான பேஸ்பேக் நமக்கு கிடைக்கும்.

honey 2

கொஞ்சம் திக்கான பதத்தில் கெட்டி தன்மையில் இருக்கும் இந்த பாதாம் பேஸ்ட்டை முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக அப்பளை செய்துவிட வேண்டும். கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஏனென்றால் தேன் சேர்த்த இந்த கலவை கொஞ்சம் கெட்டி தன்மையில் இருப்பதால்! முகத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்துவிட்டு, 1/2 மணிநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.

- Advertisement -

முகத்தில் நீங்கள் போட்டிருக்கும் இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்து விடும். அதன் பின்பு காய்ச்சாத பாலை உங்கள் கைகளாலேயே தொட்டு முகத்தில் ஒத்தி கொடுக்க வேண்டும். அந்த சமயம் காய்ந்த ஃபேஸ் பேக் ஈரமாக தொடங்கும். அதன் பின்பு, அந்த பச்சை பாலைத் தொட்டு தொட்டு முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம். கடினமாக மசாஜ் செய்து விடக்கூடாது. சாஃப்டான முறையில் தடவிக் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். சோப்பு போட்டு கழுவ வேண்டாம். இந்த ஃபேஸ் மசாஜ் செய்த பின்பு ஆறிலிருந்து ஏழு மணி நேரம் வரை சோப்பு முகத்தில் படக்கூடாது.

facial

இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி ஒரு தடவையிலேயே, உங்களுடைய முகம் தங்கம்போல ஜொலிக்க ஆரம்பிக்கும். வாரத்தில் ஒருமுறை இப்படி செய்துகொள்ளலாம். ஒரே மாதத்தில் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உங்கள் அழகில் மயங்கிய போய்விடுவார்கள். திருமணமாகப் போகும் பெண்கள் கூட இந்த மசாஜை செய்து கொள்ளலாம். பியூட்டி பார்லருக்கு சென்று கோல்டன் ஃபேஸியலுக்கு ஆயிரமாயிரமாக காசை கொடுப்பதை விட, பாதாம்பருப்பு வாங்குவதற்கு கொஞ்சம் காசு செலவு செய்தால் போதுமே. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
சூப்பர் மசாலா பூரிய இவ்வளவு ஈஸியா செஞ்சிட முடியுமா? இத்தனை நாளா இந்த டிப்ஸ் தெரியாம போச்சே!

இது போன்ற மேலும் பல அழகு சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -