சூப்பர் மசாலா பூரிய இவ்வளவு ஈஸியா செஞ்சிட முடியுமா? இத்தனை நாளா இந்த டிப்ஸ் தெரியாம போச்சே!

masala-poori
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்பவும் போல ஒரே மாதிரி பூரி செய்து தருவதை விட, கொஞ்சம் மசாலா பொருட்களை சேர்த்து, புது விதமாக இந்த பூரியை சுட்டு தந்து பாருங்க. உங்க வீட்ல இருக்க சின்ன குழந்தைங்க இந்த புரியை சும்மாவே கூட சாப்பிடுவாங்க. இந்தப் பூரியில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, உருளைக்கிழங்கு சேர்த்து, கொஞ்சம் காரசார தோடு, ஆளு மசாலா பூரி செய்யப்போகின்றோம். கொஞ்சம் வித்தியாசமானது. ரொம்ப ரொம்ப சுலபமானது. இந்த பூரியை எப்படி செய்வது இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க?

masala-poori1

Step 1:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில், 1/2 கப் அளவு ரவை போட்டு, அதே கப்பில் 1/2 கப் அளவு சுடுதண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை ஊரிய ரவையில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, சீரகம் – 1 ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1, இவைகளை முதலில் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இந்த சமயத்தில், ஊறவைத்த ரவை யோடு சேர்த்து தயார் செய்து வைத்திருக்கும் இந்த மாவு கொஞ்சம் தளதளவென்று தான் இருக்கும்.

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக தயாராக வைத்திருக்கும் இந்த கலவையோடு, தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் கோதுமை மாவு சேர்த்து, பிசைய வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்ற தேவை இல்லை. இந்த பூரி மாவு ரொம்பவும் கட்டியாகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் தளதளவென்றும் இருக்கக்கூடாது. சப்பாத்தி மாவு அளவிற்கு, தொட்டால் சாஃப்ட் ஆக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மாவை தயார் செய்ய வேண்டும்.

masala-poori2

Step 3:
கையில் கொஞ்சமாக எண்ணெய் தடவிக் கொண்டு, இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக கோதுமை மாவை தொட்டு, சாதரணமாக நாம் எப்படி பூரியை தேய்ப்போமோ, அதுபடியே தேய்த்து எண்ணெயில் பூரி சுடுவது போல பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டியதுதான்.

- Advertisement -

இந்த மாவை தேய்க்கும் போதும் ரொம்ப மெலிசாக தேய்த்து வைத்தால் பூரி உப்பி வராது. ரொம்ப தடிமனாக தேய்த்து விட்டால், உள்ளே வேகாதது போல இருக்கும். தேய்க்கும் போதும் கவனம் தேவை. பொன்னிறமாக சிவந்த இந்த பூரியை சுட சுட உங்கள் குழந்தைகளுக்கு பரிமாறி பாருங்கள். தட்டு உடனே காலியாகிவிடும்.

masala-poori3

உங்களுடைய வீட்டில் இந்த பூரிக்கு சேர்ப்பதற்கு சில்லி ப்ளேக்ஸ் இல்லை என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் வர மிளகாயை, மிக்ஸியில் போட்டு 2 ஓட்டு ஓட்டி விட்டு, சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் மசாலா பொருட்கள் அதிகமாக தேவை என்றால், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை இந்த மாவோடு சேர்த்து, பிசைந்து கரம் மசாலா வாசம் பிடித்தவர்கள், கரம் மசாலாவையும் கால் ஸ்பூன் சேர்த்து பிசைந்து, பூரியை சுட்டு சாப்பிட்டு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -