2 நாட்களில் தங்கம் போல ஜொலிக்க, தங்க குளியல் பொடியை வீட்டிலேயே எப்படி அரைப்பது? உங்களுக்கும் தங்க தேவதையா மாற ஆசை இருந்தா, இந்த டிப்ஸ் மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சிக்கோங்க!

face

பியூட்டி பார்லருக்கு சென்று கோல்டன் பேஸியல் செய்து கொண்டு, முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்க அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். உடல் முழுவதும் தங்கம் போல ஜொலிக்க, அதிகப்படியான காசை செலவு செய்தும் எந்த மசாஜும் செய்து கொள்ளவேண்டிய அவசியமே கிடையாது. தினமும் குளிக்கும் போது இந்தப் பொடியை உடம்பு முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 5 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு குடித்தால், மிகவும் நல்லது. ஊறவைத்து குளிப்பதற்கு நேரம் இல்லாதவர்கள், சோப்புக்கு பதிலாக இந்தப் பொடியை தேய்த்து குளித்தாலே 2 நாட்களில் நல்ல வித்தியாசத்தை உங்களால் பார்க்க முடியும்.

carrot

இந்த தங்க குளியல் பொடியை செய்ய தேவையான பொருட்கள். உலர்ந்த ஆரஞ்சு தோல், கேரட் துருவி காய வைத்தது, மைசூர் பருப்பு, மஞ்சள் தூள் அவ்வளவு தான். 1 கப் அளவு ஆரஞ்சு பழத்தோலை எடுத்து கொண்டால், அதே கப்பில் 1/2 கப் மைசூர் பருப்பு, துருவிய கேரட் 1/2 கப், 1 ஸ்பூன் மஞ்சள் இந்த அளவுகளின் கணக்கில் நாம் இந்த நான்கு பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத் தோலில், பாதி அளவு மைசூர் பருப்பு கேரடும் நமக்கு தேவைப்படும்.

ஆரஞ்சு பழத் தோல்களை நன்றாக வெயிலில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களில் ஆரஞ்சு பழத்தோல் ஈரமில்லாமல் நன்றாக காய்ந்து விடும். கேரட்டை கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக சீவி, வாழைக்காய் சிப்ஸ் போடும் போது நீள் வாக்கில் சீவுவோம் அல்லவா? அதேபோல கேரட்டையும் நீள நீளமாக சீவிக்கொண்டு வெயிலில் ஒரு துணியில் போட்டு உலர்த்தினால் இரண்டே மணி நேரங்களில் நன்றாக மொறுமொறுவென காய்ந்து விடும்.

orange

மைசூர் பருப்பை ஒரு மணி நேரம் வெயிலில் கொட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆக மொத்தத்தில் இந்த மூன்று பொருளிலும் ஒரு துளி அளவும் ஈரப்பதம் இருக்கக் கூடாது. ஈரப்பதம் இருந்தால் இந்த பொடி சீக்கிரமே கெட்டுப் போய்விடும். தயாராக இருக்கும் இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு மஞ்சள் தூளையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு முறை இந்தப் பொடியை சல்லடையில் கொட்டி சலித்துக் கொள்ளுங்கள். சலித்து எடுக்கும்போது திப்பி மீதமிருக்கும். மீதம் இருக்கும் இந்த திப்பியை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளவேண்டும். இப்படியாக எல்லா பொடியும் நைசாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஈரம் படாமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பொடி கெட்டுப் போய்விடுமோ என்ற பயம் இருந்தால், இந்தப் பொடியை நீங்கள் ஃப்ரிட்ஜில் கூட வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

bath-powder

ஒரு சிறிய பௌலில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த தங்க குளியல் பவுடரை தேவையான அளவு போட்டு, தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக திக்காக கரைத்து, உங்கள் உடல் முழுவதும் பூசி மசாஜ் செய்யவேண்டும். உடல் முழுவதும் தேவையில்லை என்பவர்கள் முகத்திற்கு மட்டும் கூட இந்த பொடியை பயன்படுத்தி கொள்ளலாம்.

face2

குளிக்கும்போது குளியல் பொடியாகவும் இந்தப் பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஃபேஸ் மாஸ்க் மாதிரி போட்டு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.

face1

இந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரண்டே நாட்களில் உங்களுடைய சருமத்தில் வித்தியாசத்தை உணரமுடியும். வெறும் 30 நாட்களில் நீங்கள் தங்கம் போல மின்னுவதற்கு 100% கேரன்டி. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு கிடையாது.