- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் கோமதி சக்கர பரிகாரம்

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் கோமதி சக்கர பரிகாரம்

- Advertisement -

தீபாவளி திருநாள் அன்று மகாலட்சுமியை பூஜை செய்யும் வழக்கத்தை நம்மில் பலரும் வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள். அப்படி தீபாவளி அன்று செய்யக்கூடிய இந்த மகாலட்சுமி பூஜையால் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாவதோடு செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தீபாவளி அன்று மாலை 6:00 மணிக்கு கோமதி சக்கரத்தை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் அனைத்து விதமான செல்வ வளங்களையும் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அதிர்ஷ்டத்தை தரும் பரிகாரம்

மகாலட்சுமி பூஜையை செய்வதற்குரிய அற்புதமான நாளாக தான் தீபாவளி அன்றும் தீபாவளிக்கு மறுநாள் வரக்கூடிய அமாவாசை நாள் அன்றும் திகழ்கிறது. இப்படிப்பட்ட நாளில் மகாலட்சுமியை நினைத்து நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பூஜைகளும் பரிகாரங்களும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறச்செய்யும். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கோமதி சக்கரத்தை வைத்து நாம் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று மாலை 6:00 மணிக்கு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு 22 கோமதி சக்கரம் வேண்டும். சிவப்பு நிற பட்டு துணி 1 1/4 மீட்டர் வேண்டும். இதற்கு சுத்தமான பட்டு துணி தான் வாங்க வேண்டும் என்று இல்லை ஹாப்பட்டு என்று கடைகளில் கிடைக்கும். அதைக்கூட வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக இதற்கு ஒரு வெள்ளி குங்குமச்சிமிழ் வேண்டும். மேலும் செந்தூரம் வேண்டும். இப்பொழுது தீபாவளி அன்று மாலை 6:00 மணிக்கு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை செய்வதற்கு என்று தனியாக ஒரு தீபத்தையும் எடுத்து ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தீபத்திற்கு முன்பாக ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். பிறகு ஒரு தட்டையோ அல்லது மனை பலகையோ வைத்து அதற்கு மேல் வாங்கி வைத்திருக்கும் சிவப்பு பட்டு துணியை விரிக்க வேண்டும். பிறகு அதற்கு மேல் 21 கோமதி சக்கரங்களை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பக்கத்தில் ஒரு குங்குமச்சிமிழ் வைக்க வேண்டும். இந்த குங்குமச்சிமிழ் என்பது 21 கோமதி சக்கரத்தையும் போடும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இதனுடன் செந்தூரத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது மகாலட்சுமி தாயாரை மனதார வழிபாடு செய்து விட்டு ஒரே ஒரு கோமதி சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே தெருவிற்கு சென்று அங்கு யாருக்கும் தெரியாத அளவிற்கு கையில் இருக்கக்கூடிய கோமதி சக்கரத்தை வைத்து ஏழு முறை நம்முடைய தலை முதல் பாதம் வரை சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றிவிட்டு நமக்கு பின்புறமாக அந்த கோமதி சக்கரத்தை தூக்கி போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

இரவு முழுவதும் இந்த பொருட்கள் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த 21 கோமதி சக்கரங்களையும் எடுத்து குங்குமச்சிமிழ் போட்டு விட வேண்டும். பிறகு கோமதி சக்கரங்கள் தெரியாத அளவிற்கு செந்தூரத்தை முழுவதுமாக போட்டு அதற்கு மேல் மூடியை போட்டு மூடி விட வேண்டும். பிறகு இதை சிவப்பு நிற பட்டு துணியில் வைத்து ஒரு மூட்டையாக கட்டி அதை அப்படியே பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த மூட்டை ஒரு வருடம் அதாவது இந்த தீபாவளிக்கு செய்தால் அடுத்த தீபாவளி வரை பணம் வைக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:

இந்த பரிகாரத்தை யார் ஒருவர் முழு மனதோடு செய்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்