லக்ஷ்மி தேவிக்கு இணையான கோமதி சக்கரம்

gomati-chakra

கோமதி சக்கரத்தினை வடமாநிலங்களில் உள்ளவர்கள் காலம் காலமாக பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஏனென்றால் இந்த சக்கரம் குஜராத் மாநிலத்தில் துவாரகா எனும் இடத்தில் கோமதி  நதிக்கரையில் தான் அதிகமாக கிடைக்கும். இதனால் தான் இதற்கு கோமதி சக்கரம் என்ற பெயரே வந்தது. வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்த கோமதி சக்கரத்தினை அந்த மகாலட்சுமிக்கு இணையாக நினைத்து தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்து வருகின்றனர். கோமதி சக்கரத்தின் அருமை பெருமைகளை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்ததால் இதில் இருக்கும் நன்மையை நம் அனைவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் தற்சமயம் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நாம் அறியப்படாத விஷயங்களே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. கோமதி சக்கரத்தின் பற்றி அறிந்து கொண்டவர்களாக இருந்தாலும் கூட, அதை நம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? எப்படி பூஜை செய்வது. பூஜை செய்தால் என்ன நன்மை கிடைக்கும். இதைப்பற்றியெல்லாம் அதிகமான சந்தேகங்கள் இன்றுவரை இருந்து கொண்டுதான் வருகிறது. அந்த சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக தான் இந்த பதிவு.

gomati-chakra

இந்த கோமதி சக்கரமானது எப்படி உருவானது என்ற புராணக் கதையை நாம் தெரிந்து கொண்டாலே நம் வீட்டில் இதை வைக்கலாமா வேண்டாமா வேண்டாமா என்ற சந்தேகமானது முதலில் தீர்ந்துவிடும். 108 திவ்யதேசங்களில் ஒன்று லக்னோவில் இருக்கும் நைமிசாரண்யம் என்ற இடம். இந்த இடத்தில் பெருமாளின் கையில் இருக்கும் சக்கரமானது பூமியில் விழுந்து உருண்டு ஓடிய போது, அருகிலிருந்த ஆற்றில் சக்கராயுதம் விழுந்தது. சிதறிய நீர்த்துளிகள் தான் கோமதி சக்கரமாக மாறியது என்று கூறுகிறது வரலாறு. ஆகவே பெருமாளுக்கு சொந்தமான இந்த கோமதி சக்கரமானது அந்த மகாலட்சுமிக்கும் மிகவும் பிடித்தது.

சீதாதேவி வனவாசம் இருந்த போது ‘ராமர், ‘சீதா தேவியான உங்களை காப்பாற்ற வந்து கொண்டிருக்கிறார்’ என்பதை சீதா தேவிக்கு தெரியபடுத்த ஆஞ்சநேயர் தூதுவராக சென்றார். ராமர்தான் ஆஞ்சநேயரை அனுப்பினார் என்பதற்கு சாட்சியாக ரகுவம்சத்தின் மோதிரமானது ஆஞ்சநேயரின் கையில் கொடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டு இருந்ததாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட இந்த கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை.

gomati-chakra

நீங்கள் புதியதாக இந்த கோமதி சக்கரத்தை வாங்கி இருந்தால் முதலில் அதை காய்ச்சாத பசும்பாலில் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு தூய்மையான நீரில் கழுவி நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு செம்பு தட்டில் சிகப்பு வண்ண துணியின் மீது கோமதி சக்கரத்தை பிரதிஷ்டை செய்து, பூவைத்து மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாக உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கோமதி சக்கரத்தை பூஜை அறையில் வைக்கும்போது சக்கரம் வெளியில் தெரியும்படி தான் வைக்க வேண்டும். அதாவது சுழி வானத்தைப் பார்ப்பதுபோல் இருக்க வேண்டும்.

gomati-chakra

இந்த கோமதி சக்கரத்தை நம் வீட்டில் வைத்து வழிபட்டால் பல புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வழிபட்ட பலனை நம் வீட்டிலேயே பெறலாம்.

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால், அந்த தோஷமானது சில நாட்களில் தானாகவே விலகிவிடும். நாக தோஷத்திற்கு சிறப்பாக எந்த பரிகாரமும் செய்ய வேண்டாம்.

gomati-chakra

கோமதி சக்கரம் உள்ளவர்களது வீடு மிகவும் சந்தோஷமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களது கோபம் தானாகவே குறைவதால் பிரச்சினைகள் ஏதும் வராது.

உங்களது வீட்டில் வாஸ்துவினால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் அந்த தோஷங்களை இந்த கோமதி சக்கரமானது நீக்கிவிடும்.

 gomati-chakra

சிறிய வடிவத்தில் உள்ள 7 கோமதி சக்கரத்தை ஒரு சிவப்புத் துணியில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விட்டால் எதிர்மறை ஆற்றலானது நம் வீட்டிற்குள் நுழையாது.

சிலருக்கு வலம்புரி சங்கு சுலபமாக கிடைக்காது. அந்த வலம்புரி சங்கினை வைத்து வழிபட்டால் எந்த அளவிற்கு பலன் உள்ளதோ அதே பலனானது இந்த கோமதி சக்கரத்தை வைத்து வழிபடுவதன் மூலமும் நாம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
கற்றாழைச் செடியை வாசல் முன் வளர்க்கக்கூடாதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Gomati chakra uses in Tamil. Gomati chakra benefits in Tamil. Gomati chakram payangal in Tamil. Gomati chakram palangal in Tamil.