உங்கள் சேமிப்பு பல மடங்காக பெருக இந்த நாட்களில் பணத்தை சேமித்து பாருங்கள்.

puthan savings

பணத்தை பலமடங்காக பெருக்குவதற்கு எதற்காக பல வழிகள் சொல்லப்படுகின்றன? எந்த வழி உங்களுக்கு பலன் அளிக்கின்றது என்பதை நீங்கள் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது. ஒருவர் அதிகப்படியான பணத்தை சேர்த்து விட்டால், அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையானது தானாகவே வந்துவிடும். மனதைரியம் வந்துவிடும். கண்டிப்பாக உற்றார், உறவினர்கள் கூட, இந்த காலத்தில் பணம் இருந்தால்தான் நம்மை தேடி வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குறை கூறிவிட முடியாது. இருந்தாலும், பணம் தான் முதலில் வந்து நிற்கின்றது. சிலர் கேட்கலாம்! வெறும் பணத்தை வைத்து என்ன செய்வது? கடைசி காலத்தில் நம்மை தூக்கி செல்ல நான்கு பேர் வேண்டாமா? என்று. அந்த நான்கு பேர் கூட 4 லட்சம் இருந்தால் தான் வருவார்கள். என்பதை ஒருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் கட்டாயமாக முன்னேறி விடலாம். நம்முடைய லட்சியங்களில் ஜெயிப்பதற்கு கூட, பல லட்சங்கள் தான் இந்த காலத்தில் தேவைப்படுகிறது. இயல்பை புரிந்து கொண்டு, பணத்தைச் சேர்க்கும் சூட்சமத்தை கற்றுக்கொண்டு, சில யுத்திகளை பயன்படுத்தி, வாழ்பவனே, வாழ்க்கையில் முன்னேறுகின்றான். வியாக்கியானமும், தத்துவமும் வந்து நமக்கு சோறு போடாது. பணம்தான் தேவை, என்பதை புரிந்துகொண்டு சேமித்து வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் பணத்தை சேர்க்க வேண்டும் என்று விரும்பினால் அந்த பணத்தின் மீது ஆசைப்பட்டு கொண்டே இருங்கள். பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக, அதிகமாக நம்மிடம் பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு பணத்தை கொடுக்கும் போது, உங்களிடம் இருந்து பணம் பெறுபவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பணத்தை தாருங்கள். அடுத்தவர்கள் உங்களைவிட பணக்காரர்களாக இருக்கிறார்களே, என்ற பொறாமை குணத்தை அடியோடு விட்டுவிடுங்கள். அவர்களைவிட எப்படி முந்தியடியடித்து பணக்காரர்கள் ஆவது என்பதை யோசிக்காமல், நம்மிடம் இருக்கும் ஆற்றலை, திறமையை வைத்துக் கொண்டு எந்த வழியில் எல்லாம் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். நல்லவழி சுலபமாகக் கிடைத்துவிடும்.

பொதுவாகவே பணத்தை சேர்க்கும் நேரம் என்பது சுக்கிர ஓரை, குரு ஓரை, இந்த இரண்டு ஓரையில் சேர்க்க வேண்டும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சுக்கிரனுக்கு பிடித்த நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாளில், இந்த மூன்று நட்சத்திரங்களின் நேரமும் வரும். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறு தொகையை சேர்க்க ஆரம்பித்தாலும், அந்த தொகையானது சீக்கிரமாக பெரிய சேமிப்பாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

guru bagwan

இதேபோல் குருவிற்கு உகந்த நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று தினங்களில் வரும், இந்த நட்சத்திர நேரங்களை குறித்துக்கொண்டு அந்தநேரத்தில் சிறு தொகையை சேர்த்து வைக்க பழகுங்கள். இந்த நட்சத்திரங்கள், நாட்கள், நேரம் அனைத்தும் தினசரி நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

- Advertisement -

puthan

நீங்கள், உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை ஒரு பச்சை துணியில் கட்டி சேமித்து வைக்கலாம். பச்சை உண்டியலில் அல்லது பச்சை துணிப்பையில் சேமிக்கலாம். உங்கள் பணப்பெட்டி பச்சை நிறத்தில் இருக்கலாம். இதுவும் ஒரு சிறந்த, நல்ல வழிதான். ஏனென்றால் புதனுக்கு பிடித்த நிறம் பச்சை. நாம் செய்யும் தொழில், வியாபாரம், அலுவலக வேலையாக இருந்தாலும் சரி. அது சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் புதனின் ஆசிர்வாதம் மிக முக்கியம் என்பதால் தான் பச்சை நிறத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. உங்களுடைய சேமிப்பு அதிகரிக்க, இந்த பரிகாரம் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்களின் வீடு நிம்மதியற்ற சூழ்நிலையில் இருக்கின்றதா? என்னதான் செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam semippu in Tamil. Semippu in tamil. Panam semippu. Panam semikka vazhigal. Panam sera Tamil.