உங்களின் வீடு நிம்மதியற்ற சூழ்நிலையில் இருக்கின்றதா? என்னதான் செய்வது?

pournami
- Advertisement -

சில பேருக்கு எவ்வளவுதான் கையில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும் நிம்மதி என்பது இருக்காது. சிலபேருக்கு மனநிறைவான வாழ்க்கை அமைந்திருக்கும். தாராளமாக செலவு செய்யும் அளவிற்கு பண வசதி இருக்காது. இருப்பவர்கள் இல்லாததை தேடி செல்வது தான் வாழ்க்கை. தேடல் இருந்து கொண்டே இருந்தால்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து விட்டால், நாம் இறைவனை நினைப்போமா? அதிகப்படியான காரத்தை சுவைக்கும் நாவிற்கு தான் தான், இனிப்பின் அருமை தெரியும் என்று கூறுவார்கள். அதிகப்படியான கஷ்டத்தை சுமக்கும் மனதால் தான், சந்தோஷத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டாலே வாழ்க்கை சுகமானதாக இருக்கும். வீட்டில் மன நிம்மதி இல்லாத சூழ்நிலையில், வரும் பிரச்சனைகளை தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள். நிச்சயம் கூடிய விரைவில் உங்கள் வாழ்க்கைக்கு ஓர் விடிவு காலம் பிறந்து விடும்.

kan-thirusti

நம்முடைய வீட்டில் நிம்மதி இருப்பதற்கும், கெடுவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். அடுத்தவர்களின் கண் திருஷ்டியாக இருந்தாலும், பொறாமை குணமாக இருந்தாலும், கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்திகளின் வேலையாக இருந்தாலும், அதை முதலில் நம் வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட வேண்டும். அதன் பின்புதான் நம் வீடு நிச்சயமாக சுபிட்சத்தை அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட கோளாறில் இருந்தும் உங்களையும் உங்களது வீட்டையும் பாதுகாக்கும் ஒரு சிறிய எளிமையான பரிகாரம் தான் இது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயமாக பலன் இருக்கும்.

- Advertisement -

ஒரு பெரிய அளவிலான சிகப்பு காட்டன் துணியை எடுத்து கொள்ள வேண்டும். நல்ல தேங்காய் ஒன்று வாங்கிக் கொள்ளவும். கட்டாயம் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். சிறிதளவு குங்குமத்தில் பன்னீரை ஊற்றி குழைத்துக் கொள்ள வேண்டும். இந்த குங்குமத்தை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கும் இந்த தேங்காயை, சிகப்பு துணியை வைத்து வெளியில் தெரியாமல் மூட்டையாக கட்டிக்கொள்ள வேண்டும். இந்த முடிச்சு பரிகாரத்தின் இறுதி வரை கட்டாயம் பிரிய கூடாது.

swastik symbol benefits tamil

இந்த மூட்டையை உங்கள் வலது கைகளில் வைத்துக்கொண்டு, உங்கள் வீட்டில் எத்தனை அறைகள் உள்ளதோ அந்த அறைகளில் வாசபடிக்கு வெளியில் நின்று கொண்டு, மூன்று சுற்றுகள் சுற்றி விட வேண்டும். பூஜை அறைக்கு மூன்று சுற்று, சமையலறைக்கு மூன்று சுற்று, படுக்கை அறைக்கு மூன்று சுற்று, இப்படி உங்கள் வீட்டில் எல்லாம் அறையில் கதவிற்கு வெளிப்பக்கத்தில் நின்று மூன்று சுற்றுகளை சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு இந்த தேங்காயை எடுத்துக்கொண்டுபோய் ஓடும் ஆற்றிலோ, அல்லது சமுத்திரத்திலோ சேர்த்துவிடலாம்.

- Advertisement -

தண்ணீரில் உங்களது கால்களை நனைத்தபடி மகாவிஷ்ணுவை மனதில் நினைத்துக்கொண்டு ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து உங்கள் வீட்டில் பிடித்திருக்கும் பீடைகள் அனைத்தும் ஒழிந்து போக வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை தண்ணீரில் விட்டு விடுங்கள். உங்களை பிடித்தது ஒழிந்தது என்று நினைத்துக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பி பார்க்காமல் வந்துவிடலாம். கட்டாயம் தண்ணீரில்தான் இதை விட வேண்டும். வேறு எங்கும் போட்டு விடக்கூடாது.

coconut

இந்தப் பரிகாரத்தை பௌர்ணமி தினத்தன்று நல்ல நேரம் பார்த்து உங்களது வீட்டில் செயல்படுத்துங்கள். பௌர்ணமி தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் அன்றைய தினமே ஆற்றில் விட்டு விடவேண்டும். தேங்காயை எக்காரணத்தைக் கொண்டும் இரவு உங்கள் வீட்டில் தங்க விடக்கூடாது. இது ஒரு சுலபமான பரிகாரம் தான். உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரமானது உங்களை விட்டு நீங்குவதற்கு நம் முன்னோர்கள் கூறிய எளிமையான சூட்சமம் தான். இது நம்பிக்கை உள்ளவர்கள் செயல்படுத்தி பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
பாவங்களை போக்கும் பஞ்சலிங்க பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti neenga. Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil. Kan thirusti remedies Tamil.

- Advertisement -