- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆனி மாதம் வேலை தொழில் சிறப்பாக திகழ

ஆனி மாதம் வேலை தொழில் சிறப்பாக திகழ

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றால் அவர் செய்கின்ற வேலை சிறப்பாக இருக்க வேண்டும் அல்லது அவர் செய்கின்ற தொழில் சிறப்பாக இருக்க வேண்டும். வேலையும் தொழிலும் சிறப்பாக இருந்தால் மட்டும் போதுமா? உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால்தானே அதை செய்ய முடியும். ஆக உடல் ஆரோக்கியம், வேலை, தொழில் போன்ற அனைத்துமே சிறப்பாக இருந்தால்தான் ஒருவருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். அப்படி இவை அனைத்தையும் சிறப்பான முறையில் நமக்கு தரக்கூடிய ஒரு தெய்வமாக திகழக் கூடியவர் தான் சூரிய பகவான். அந்த வகையில் ஆனி மாதத்தில் சூரிய பகவானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆனி மாதம் சிறப்பாக திகழ

நவகிரகங்களுக்கு தலைவராக திகழக் கூடியவர் சூரிய பகவான் என்று நம் அனைவருக்கும் தெரியும். சூரிய பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலையில் ப்ரமோஷன் கிடைக்கும், அரசாங்க வேலை கிடைக்கும், தொழில் சிறப்பாக நடைபெறும், மேலும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் இருக்கிறது என்பவர்களும் சூரிய பகவானை வழிபாடு செய்யும்பொழுது அந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் ஆனி மாதத்தின் முதல் நாளே சூரியபகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையோடு தான் பிறக்கிறது. அதனால் ஆனி மாதத்தில் சூரிய வழிபாடு சற்று கூடுதல் சிறப்பை பெறுகிறது.

- Advertisement -

பொதுவாகவே சூரிய வழிபாட்டை அனுதினமும் நாம் செய்ய வேண்டும். இதற்கு எளிமையான வழிமுறை என்பது இருக்கிறது. சூரிய பகவான் உதயமாகும் பொழுது கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு அவரை பார்த்து அவருடைய மந்திரத்தை கூறி வழிபாடு செய்வதுதான். பொதுவாக நாம் செய்யக்கூடிய வழிபாடு ஒவ்வொரு மாதத்திலும் கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு சில வழிமுறைகள் மாறுபடும். இதில் பலரும் சூரிய பகவானை பார்த்து அக்யம் விட்டு வழிபாடு செய்வார்கள். அவ்வாறு அக்யம் விடும் பொழுது அந்த தண்ணீரில் சுத்தமான சந்தனத்தை கலந்து அக்யம் விட்டு சூரிய பகவானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.

சூரிய பகவானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. பொதுவான மந்திரங்களை தான் பலரும் கூறுவார்கள். ஆனி மாதத்தில் கிரக நிலைகளுக்கு ஏற்றார் போல் ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த சூரிய பகவானின் மந்திரத்தை ஆனி மாதம் முழுவதும் சூரிய பகவானை பார்த்து சந்தன நீரை அக்யம் விட்டு கூறுபவர்களுக்கு ஆனி மாதத்தில் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் அவர்கள் எதை நினைத்த சூரிய பகவானே வழிபாடு செய்தார்களோ அது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

“ஓம் க்ரிணிஹ் மித்ர ஆதித்யாய நமஹ”

இதையும் படிக்கலாமே: ஆனி மாத பஞ்சமி வழிபாடு

சூரிய பகவானின் வழிபாடு என்பது நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவக்கூடிய ஒன்று. ஆனி மாதத்தில் இந்த மந்திரத்தை கூறி சூரிய பகவானை வழிபாடு செய்பவர்களுக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அவர்களின் வாழ்க்கை சூரிய பகவானை போல பிரகாசமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்