புதபகவானால் யோகம் பெறக் கூடிய ராசிகாரர்கள்

puthan good luck shine
- Advertisement -

கிரகங்கள் எப்போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். அதில் சில கிரகங்களின் பெயர்ச்சி அதிக கால இடைவெளியிலும், சில கிரகங்கள் பெயர்ச்சி குறுகிய கால இடைவெளியிலும் நடைப்பெறும். அந்த வகையில் புதன் குறுகிய காலத்தில் பெயர்ச்சி அடையக் கூடிய ஒரு கிரகம் ஆகும்.

புதபகவான் புத்திசாலித்தனத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அதிபதியாக விளங்க கூடியவர். இவர் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அதிகாலையில் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். மேஷ ராசியில் இவர் பின்னோக்கி பிரவேசிக்க உள்ளார். இதை புத வக்கிர காலம் என்று சொல்வார்கள். ஆனாலும் இதன் மூலமும் சில ராசிகள் நன்மை அடைகிறார்கள் அவர்கள் பற்றிய தகவலை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

புதபகவானால் யோகம் பெறக் கூடிய ராசிக்காரர்கள்

சிம்ம ராசி

இந்த ராசியின் ஒன்பதாம் வீட்டில் புதன் பின்னோக்கி பயணிக்கிறார். சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் சிறப்பான பலன்களை பெறுகிறார்கள். புதபகவானின் இந்த வக்கிர நிலை இவர்களின் தொழில் வளத்தை சாதகமாக மாற்றி தருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வெளிநாட்டுகளில் வேலை வேண்டும் என்கிற கனவு நினைவாகும். முதலீடுகளில் அதிக லாபத்தை பெறலாம். நிதி நிலைமை சீராகும் வருமானம் அதிகரிக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் வக்கிர நிலையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இவர்களின் தொழிலில் ஆதாயத்தை பெறுகிறார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டு. இது வரை வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில்களை இந்த காலக்கட்டத்தில் துவங்குவார்கள். இவர்களின் பேச்சுத் திறமையால் அனைத்து இடங்களிலும் முன்னேற்றம் பெறுவார்கள். குடும்பத்துடன் இணக்கமாக இருப்பார்கள்.

- Advertisement -

கும்ப ராசி

இந்த ராசியில் புதன் ஐந்தாம் வீட்டில் பின்னோக்கிய நிலையில் இருக்கிறார். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலையை புதன் பகவான் ஏற்படுத்த உள்ளார். தொழிலில் லாபம் கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை உண்டாகும். வணிகத்தில் நல்ல லாபத்தை சம்பாதிக்கலாம். அதிக அளவு சேமிப்பு ஏற்படக் கூடிய காலம் இது. திருமணம் காதல் வாழ்க்கை போன்றவற்றில் சுமூகமான போக்கை காணலாம்.

புதபகவானின் இந்த வக்கிரப் பெயர்ச்சி மூலம் இந்த மூன்று ராசிகாரர்கள் நல்ல யோகத்தையும் பெறப் போகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் மாற்றமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் படி இந்த ராசிக்காரர்கள் யோகத்தை பெறுகிறார்கள்.

இதையும் படிக்கலாமே: ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

இதைத் தவிர மற்ற ராசிகாரர்களுக்கு அவரவர் கிரகத் தன்மைகளுக்கு எற்ப பலன்களை பெறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான் இந்த பதிவு. இதிலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற கருத்தினை நினைவிற்கு கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -