ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

raghu astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்திலேயே தீயகிரகமாக கருதப்படுவது ராகுவும் கேதுவும் தான். அதிசக்தி வாய்ந்த கிரகங்களான இவர்கள் ஒரு ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் அங்கு அவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளும் சவால்களும் அதிகமாக இருக்கும். ஆகையால் தான் இவர்கள் தீய கிரகங்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராகுவுக்கு சொந்த ராசிகள் என எதுவும் கிடையாது.

இவர் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசியின் அதிபதியை பாதிப்பார். தற்போது ராகு மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இவர் ஒரு ராசியில் பலம் இழந்து இருந்தாலும் பிற ராசிகளுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைகள் இருக்கும் அந்த வகையில் ராகுவினால் செல்வாக்கை பெறப்போகும் ராசிக்காரர்களை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மிதுனம்
மிதுனம் ராசியில் ராகுவின் நிலை வலுவாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் பணிபுரியும் இடத்தில் பிரபலமாவார்கள் இந்த சமயத்தில் இவர்களுடைய தொடர்புகள் எழுதல், கற்றல் திறன்கள் அதிகரித்து சிறந்து விளங்குவார்கள். ஊடகம், தொழில்நுட்பம், வணிகத் துறைகளில் பணியாற்றுபவர்கள் ராகுவின் செல்வாக்கினால் உச்சத்தை பெறுவார்கள்.

கன்னி ராசி

கன்னி ராசியில் ராகுவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் பணித்திறன்களில் சிறந்து விளங்குவார்கள். பணி செய்யும் இடங்கள் இவர்களுக்கு சாதகமாக அமையும். அது மட்டும் இன்றி ஜோதிடர்கள் உடல் நலம் மற்றும் சேவை மேலாண்மை துறையில் இருப்பவர்கள் ராகுவின் செல்வாக்கினால் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

- Advertisement -

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் முற்போக்கான மற்றும் மனிதாபிமான சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் சமூக நீதி சீர்திருத்தம் புதுமைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் செயல்பாடுகள் அசாத்தியமானதாக இருக்கும். ராகுவின் செல்வாக்கினால் மக்கள் அறிவியல், சமூக பணி, செயல்பாடு போன்ற துறைகளில் விளங்குபவர்கள் சிறந்து தனித்துவம் பெற்று விளங்குவார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தைரியமான அதே நேரத்தில் சாகச தன்மையுடன் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ராகு செல்வாக்கினால் நற்பெயர் கிடைக்கும். இவர்களுக்கு ஆக்கிரமிப்பு மற்றும் போட்டி தலைமை பண்புகள் அதிகம் உண்டு. இந்த ராசிக்காரர்கள் தைரியமாக எதையும் செய்வார்கள். விளையாட்டு ராணுவம் அரசியல் தொடர்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் நற்பெயரும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களை ராகு பகவான் கவர்ச்சியானவர்களாகவும் ஆக்கப் பூர்வமானவர்களாகவும் ஆக்குகிறார். நாடகம் கலைத்துறை பொழுது போக்குகளில் எந்த ராசிக்காரர்கள் அதிக அளவில் இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பிலேயே பொறுமை இருந்தாலும் தாராள குணம் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள். ராகு பகவானின் செல்வாக்கினால் கல்வி தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் சிறந்த முன்னேற்றத்தை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் பெயர்ச்சி மற்ற 12 ராசிக்காரர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் உடைய இந்த பெயர்ச்சி காலமானது சில ராசிகளுக்கு நற்பலன்களை தந்து கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றிய தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதுவும் மாறுவதற்கு உட்பட்டதே என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -