மீனத்தில் நுழையும் சூரியனால் யோகம் பெறக்கூடிய ராசிகள்

good luck shine suriyan
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகிற ஏப்ரல்16ஆம் தேதி வரை சூரியன் தன்னுடைய நட்பு ராசியான மீனத்தில் தொடர்வதால் சில ராசிகள் பெரும் நற்பலன்களை பெறுகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சூரியனால் யோகம் பெறும் ராசிகள்

ரிஷபம் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை ஆதாய ஸ்தானத்தில் சூரியனுடைய அமைப்பு சாதகமாக இருக்கிறது. ஆகையால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பார்கள்
பணியிடத்தில் நல்ல செல்வாக்கும் மதிப்பும் உயரும். இவர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த வருமானங்கள் இவர்களை தேடி வரக் கூடிய காலம் இது.

- Advertisement -

மிதுன ராசி

இந்த ராசிக்கு பத்தாவது இடத்தில் சூரியனின் சஞ்சாரம் தொழிலில் மிகவும் சிறப்பான யோகத்தை பெறுவார்கள். செல்வாக்கு அதிகரிக்கும் சம்பளம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு மனை சொத்து வாங்க கூடிய யோகங்கள் வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டிலிருந்தும் வேலைக்கான வாய்ப்புகள் உண்டு. மொத்ததில் வியாபாரம் தொழில் வேலை சம்பந்தமான அமைப்புகள் சுமுகமாகவே உள்ளது.

கடக ராசி

கடக ராசிக்கு சூரியனால் அதிர்ஷ்டசாலத்தில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகம் செல்வாக்கு என அனைத்திலும் இவர்களுடைய நிலை உயரக் கூடிய வாய்ப்பு உண்டு. எங்கு சென்றாலும் இவர்களுடைய பேச்சுக்கு தனி மரியாதை கிடைக்கும் நிதி ஆதாயம் அதிகரிக்கும். வீடு வாகன வசதிகளுக்கு அடித்தளம் அமைப்பார்கள். தந்தை தரப்பிலிருந்து சொத்துக்கள் வரக் கூடிய யோகம் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். பண வரவில் நல்ல முன்னேற்றத்தில் இருக்கும்.

- Advertisement -

விருச்சக ராசி

இந்த ராசியினருக்கு சூரியன் பஞ்சமத்தில் ஸ்தானத்தில் இருப்பதால் இவர்களுக்கும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்ததை விட நிதி பலன்கள் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வேலை உங்களை தேடி வரும். புதிய வேலையில் மாறுவதற்கான நல்ல காலம் இது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரக் கூடிய நேரம்.

தனுசு ராசி

இந்த ராசிக்கு அதிபதியான சூரியன் நான்காவது வீட்டில் இருப்பதால் இவர்களுக்கு இரண்டு யோகங்கள் காத்திருக்கிறது. ஒன்று வேலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். மற்றொன்று இது வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமுகமான சூழ்நிலை அமையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். வெளிநாடு செல்லக் கூடிய ராஜயோகம் இவர்களுக்கு அதிகமாகவே உண்டு.

- Advertisement -

மகர ராசி

இந்த ராசிக்கு மூன்றாவது இடத்தில் சூரியனார் இருப்பதால் இவர்களுக்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த ராசியினருக்கு பல சலுகைகள் அதிக சிரமமின்றி வந்து சேரக்கூடிய காலம் இது. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பவர்கள் பொருளாதார நிலை உயரும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனால் யோகம் பெறும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது இந்த பதிவு இதிலும் சில மாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு என்ற கருத்தினை கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -