சுக்கிரனால் யோகம் பெறும் ராசிகள்

sukiran astrology
- Advertisement -

கிரகங்களில் செல்வத்தையும் செல்வத்தையும் வாரி வழங்கக்கூடிய கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவான் ஒரு ராசிக்காரர்களை பார்க்க ஆரம்பித்தால் அவர்கள் செல்வம் அன்பு பணம் பொருள் இவற்றிற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் அந்தஸ்துடன் வாழக்கூடிய யோகத்தை பெறுவார்கள்.

அப்படியான சுக்கிர பகவான் தற்போது சனியின் ராசியான கும்பத்தில் இருக்கிறார் மார்ச் 31 அன்று சனி தனது உயர்ந்த ராசியான மீனத்தில் சஞ்சரிக்க போகிறார். உச்ச ராசியான மீனத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் ஏப்ரல் மாதம் அனைத்து ராசிகளுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

சுக்கிரனின் இந்த சஞ்சாரமானது சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாக அமையப் போகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் முன்னேற்றம் செல்வ செழிப்பு திருமண யோகம் என பல விதமான மகிழ்ச்சியான யோகங்களை பெற போகிறார்கள். யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிகளுக்கு சுக்கிரனின் எந்த ராசி மாற்றம் ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையப் போகிறது இதனால் இவர்கள் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பெரிய அளவில் தொழில் முன்னேற்றத்தை காண்பார்கள். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதே நேரத்தில் அழகுத் தொடர்புடைய வேலையில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்ல நேரமாக இது அமைய உள்ளது.

- Advertisement -

கடகம்

சுக்கிரனின் இந்த மாற்றத்தினால் கடக ராசிக்காரர்கள் பெரும் பயனை பெற போகிறார்கள். சுக்கிரனின் சஞ்சாரம் இவர்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க போகிறது. அது மட்டும் இன்றி பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றத்தை அடையப் போகிறார்கள். திடீர் பணவரவு உண்டாகும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் அதில் நல்ல நிலையை பெறுவார்கள். இது வரை நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். துணையின் அன்பை பெற்று வாழ்க்கையில் முன்னேற கூடிய யோகத்தை பெறுவார்கள்.

துலாம்

சுக்கிரனின் இந்த சஞ்சாரத்தால் துலாம் ராசி பெரும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார்கள். ஏனெனில் துலாம் ராசிக்கு அதிபதியே சுக்கிரன் தான். துலாம் ராசியினருக்கு ஆளுமையில் வசீகரத் தன்மையும் முன்னேற்றமும் ஏற்படும். தைரியம், வீரம், செல்வம் போன்ற அனைத்தும் உங்களை மேலும் உயர்த்தும். வேலை இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இது அருமையான காலம். இதுவரை அடைந்த துன்பங்கள் அனைத்தும் விலகக் கூடிய காலம் இது.

இதையும் படிக்கலாமே: சனியின் உதயத்தால் பண மழையில் நனைய போகும் ராசிகள்.

ஜோதிடத்தை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் மாற்றம் எப்போதும் 12 ராசிகளுக்கும் ஏதேனும் ஒரு மாற்றங்களை கட்டாயம் ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியன் எந்த சஞ்சாரம் மூன்று ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தர போகிறது. இது குறித்தான தகவலை இந்த பதிவில் இப்போது நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த மாற்றங்களும் அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப சில மாறுதலுக்கு உட்பட்டவை தான் என்ற கருத்தை கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -