சுக்கிரனால் பொற்காலத்தை பெறப்போகும் ராசிகள்

sukiran astology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் தான் இந்த சுக்கிர பகவான். இவர் ஆடம்பர வாழ்க்கை, பொன், பொருட்கள், உல்லாசமான வாழ்க்கை என ஒரு மனிதன் சுகபோகமாக வாழ தேவையான அனைத்தையும் அருளக் கூடியவர். இந்த சுக்கிர பகவான் இன்று ஜனவரி 18 ஆம் தேதி இரவு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார்.

அதன் பிறகு வரும் பிப்ரவரி 12 வரை குரு பகவானின் ராசியான இந்த தனுசு ராசியில் சுக்கிரன் பயணிப்பார். இந்த பெயர்ச்சியின் காரணமாக சில ராசிகள் பொன் பொருள் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை திருமண வாழ்க்கை அமைதல் போன்ற நற்பலன்களை பெற உள்ளது. யார் அந்த ராசிக்காரர்கள் என்னென்ன பலன்களை பெற போகிறார்கள் என்பதை எல்லாம் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

மேஷ ராசி

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சியானது மேஷ ராசியினருக்கு பல வகையில் நன்மை அளிக்க கூடியதாக இருக்கப் போகிறது. மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உங்களை சுற்றி அமையும். கடின உழைப்பாளாரான நீங்கள் உழைப்பைக்கேற்ற முழு பலனையும் அனுபவிப்பீர்கள். இதனால் வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும், சம்பள உயர்வு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வயதை உடையவர்களுக்கு நல்ல வரன் அமையும். பொன் பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் தேடி வரும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கும் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியானது சாதகமான பலனை தர உள்ளது. இந்த காலக்கட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். காதல் வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் நெருக்கமும் அன்பும் அதிகரித்து சந்தோஷம் பொங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களின் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் அடையும். வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொத்துக்களை வாங்கக் கூடிய யோகங்களும் அமையக் கூடிய பொற்காலம் இது.

- Advertisement -

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரமானது விரைய ஸ்தானத்தில் உள்ளது. முதலீடுகளில் மூலமும், வியாபாரம் தொழில் மூலமும் நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும். அதை சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இந்த காலக்கட்டத்தில் வெளியூர் பயணங்கள் சுற்றுலாக்கள் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களை சுற்றி மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நிலம் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் வரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் மற்ற 12 ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அது சில ராசிகளுக்கு சுப யோகங்களாகவும் சில ராசிகளுக்கு அசைவ யோகங்களாகவும் இருக்கும். சுக்கிரனின் இந்த மாற்றத்தினால் அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: நான்காம் தசம் யோகம் பலன்கள்

இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான். அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப இதிலும் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -