குரு பெயர்ச்சியால் அதிஷ்டம் பெரும் ராசிகள்

guru jathagam
- Advertisement -

நவகிரகங்களில் குரு பகவானாக நன்மையை செய்யும் கிரகமாக கருதப்படுகிறார். இவர் ஒருவரை பார்த்து விட்டால் அவரின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை கொண்டவர். அத்தகைய குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று மேஷ ராசியில் வந்தடைந்துள்ளார். இதன் மூலம் பல ராசிகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

இந்த வியாழன் கிரகமானவர் மீனத்திக்கும் தனுஷத்திற்கும் சொந்தமான கிரகமாக விளங்குபவர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியில் மேஷ ராசி நேரடியாக கடந்துள்ளார். இவருடைய இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறக் கூடிய அந்த நான்கு ராசிக்காரர்களின் பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நான் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்

இந்த ராசியை குருபகவான் நேரடியாக கடந்திருப்பதால் இவர்கள் பல நலன்களை பெற உள்ளார்கள். அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம் திரும்பி உள்ளது என்று சொல்லலாம். இவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நன்மையாகவே முடியும். தொழில் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பொருளாதாரம் உயரும் இந்த பெயர்ச்சியால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் இவர்களுக்கு சாதகமாகவே அமையும்.

கடகம்

வியாழன் கடக ராசிக்காரர்களுக்கும் பலவிதமான யோகங்களை தரவிருக்கிறார். இது வரை தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிதாக வேலை தேடுபவர்கள் வேலை மாற்ற வேண்டும் நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தந்தை வழி உறவுகளில் ஆதாயம் அடைவார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவுகள் அதிகரிக்கும். சட்டப் பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

விருச்சகம்

வியாழனின் இந்த பெயர்ச்சியால் விருச்சிக ராசிகளுக்கு காரர்களுக்கு பல நன்மைகளை தரவிருக்கிறார். முதலாவதாக பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். படிப்பில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கை காதல் வாழ்க்கையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி நல்ல முறையில் பயணிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அமையும். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக் கூடியதாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு வியாழனின் இந்த கிரக பெயர்ச்சியால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபங்கள் வர அதிகரிக்கும். திருமண வாழ்க்கை நல்ல முறையில் நகரும். திருமணம் ஆகாதவர்களுக்கு ஆகக்கூடிய யோகம் அமையும்.

- Advertisement -

இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்டவை. இதிலும் அவரவர் கிரா சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும். இந்த நான்கு ராசிக்காரர்கள் தவிர மற்ற ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் இல்லையா என்ற கேள்வி எழுலாம். ஜோதிடத்தை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் மாற்றம் பன்னிரண்டு ராசிக்கு மாற்றத்தை தரும்.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவானால் 2024 அதிர்ஷ்டம் பெறக் கூடிய ராசிகள்

அந்த வகையில் இவர்களுக்கு கூடுதலான பலன்கள் உள்ளது. மற்ற ராசிக்காரர்கள் எப்போதும் போல தங்களுடைய உழைப்பையும் முயற்சியும் செலுத்தும் போது அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -