சூரிய பகவானால் 2024 அதிர்ஷ்டம் பெறக் கூடிய ராசிகள்

suriyan jathagam
- Advertisement -

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் கிரகங்களிலே மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஏனெனில் மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளுக்கு இவர் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறார். அதுமட்டுமின்றி இவர் மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்வர். அப்படி மாற்றும் காலமே தமிழ் மாதமாக பிறக்கிறது.

இந்த சூரிய பகவானவர் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்குவர். இவருடைய ஒவ்வொரு இடமாற்றமும் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் வந்து விட்டார்.

- Advertisement -

சூரிய பகவானின் இந்த இடப்பெயர்ச்சியினால் 2024 ஆம் வருடம் பிறக்கும் போது சில ராசிகள் இதில் அதிர்ஷ்டத்தை பெற உள்ளார்கள். அது எந்தெந்த ராசிகள் அவர்கள் எந்த மாதிரியான அதிர்ஷ்டங்களை பெறப் போகிறார்கள் என்பதை எல்லாம் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த பெயற்சியினால் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கக் கூடிய காலம் இது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறக் கூடிய அற்புதமான காலக்கட்டம் இது.

- Advertisement -

கன்னி ராசி

சூரியனின் இந்த இடமாற்றமானது கன்னி ராசிக்கு பலவித அற்புதமான பலன்களை தர உள்ளது. புதிதாக வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. சொத்து தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் விலகும். அரசு வேலை தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் சம்பள உயர்வு கிடைக்கும். இது வரை கைக்கு வராது இருந்த பணமும் வந்து சேரும்.

தனுசு ராசி

சூரிய பகவான் இந்த ராசிக்குள்ளே சஞ்சாரம் செய்வதால் இவர்களுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறார். முதலாவதாக இவர்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். இந்த புத்தாண்டில் அவர்கள் இது வரை கண்ட கனவுகள் அனைத்தும் நிறைவேறி ஆசைகள் கைக்கூடும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

இதற்கு முன் தொழில் மற்றும் வியாபாம் தவிர நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் பார்வை இவர்கள் மீது பலமாக உள்ளது.

இதையும் படிக்கலாமே: புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பலன்கள் தான் இவை அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -