சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்

sukura yogam
- Advertisement -

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இந்த சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்று விட்டால் அவர்களுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. சொகுசான வாழ்க்கை, ஆடம்பரம் பொருட்கள் சேர்க்கை, காதல், மகிழ்ச்சி இப்படி ஒரு மனிதன் அனுபவிக்க கூடிய அனைத்து இன்பத்திற்கும் காரணமாக விளங்க கூடியவர் தான் இந்த சுக்கிர பகவான்.

இவர் அசுரர்களின் குரு என கருதப்பட்டாலும் இவர் ஒருவரின் ராசியை பார்த்து விட்டால் அவர்களுக்கு யோகமான வாழ்க்கையை தான் வழங்குவார். ஆகையால் தான் திடீரென அதிர்ஷ்ட அடித்தது போல் வாழ்க்கை மாறக் கூடியவர்களை பார்த்து அவருக்கு சுக்கிர திசை அடித்து விட்டது என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

அத்தகைய சொகுசுக்காரரான இந்த சுக்கிர பகவான் தனுசு ராசியில் இருந்து இந்த பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்கு இடம்பெயர்கிறார். மார்ச் மாதம் மீன ராசிக்குள் நுழையவிருக்கிறார். மீன ராசி ஆனது சுக்கிர பகவானின் உச்ச ராசியாக விளங்கி வருகிறது. ஜோதிடத்தில் இந்த பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது

இவரின் இந்த பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் சில ராசிக்காரர்கள் இதில் அதிர்ஷ்ட ராசிக்காரர்களாக மாறப் போகிறார்கள். அவர்கள் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதன் காரணமாக அனைத்து விதமான அதிர்ஷ்டங்களையும் பெறப் போகிறார்கள். வீடு வாசல் வாகனம் சொத்துக்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் வியாபாரம் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

கடக ராசி

கடக ராசியில் சுக்கிர பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர போகின்றார். இதனால் இவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலக்கட்டம். பெரிய தலைவர்களோடு உறவு ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார நிலை நல்ல முன்னேற்ற பாதையில் செல்லும்.

- Advertisement -

கன்னி ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாம் இடத்தில் அமரப் போகின்றார். மீனத்தில் சுக்கிரன் இருக்கப் போவதால் இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கப் போகிறது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிர்ஷ்டங்கள் பெருகும். தொழில் வாழ்க்கை இரண்டிலுமே நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்து வகையிலும் நல்ல நிலையிலே இருப்பார்கள். புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும் அதிர்ஷ்ட காற்று முழுவதுமாக உங்கள் பக்கம்தான் வீசப் போகிறது.

இதையும் படிக்கலாமே: பணமழை கொட்ட போகும் ராசிகள்

இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையே. இதிலும் அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது இந்த பதிவுகளில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயன்படுமாயின் பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -