பணமழை கொட்ட போகும் ராசிகள்

raghu astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் மாற்றம் நிச்சயமாக 12 ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் இது பொதுவானவை சில கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது சில ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அதுபோல 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரன் ராகு இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணைகின்றனர்.

மீன ராசியில் ஏற்கனவே ராகு இருக்கிறார். இவருடன் சுக்கிரனும் அதே ராசியில் நுழையப் போவதால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த ஐந்து ராசிகாரர்கள் மட்டும் அதிர்ஷ்டசாலிகளாக மாறப் போகிறார்கள். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சுக்கிரன் ராகு சேர்க்கையால் வளம் பெறும் ராசிகள்

ராகு பகவான் ஒரு ராசியில் இருக்கும் போது பல சஞ்சரவுகளை ஏற்படுத்தினாலும் கூட, சுக்கிரனின் இந்த இணைவு நிச்சயம் நல்ல பலன்களை தருவதாகவே அமைகிறது. சுக்கிரன் செல்வத்தின் அதிபதி கிரகமாக கருதப்படுகிறார். அவர் ஒரு ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து அந்த ஜாதகக்காரர்களின் செல்வ நிலை தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த இணைவு சில ராசிக்காரர்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப் போகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு சுக்கிரன் இணைவால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைத்து பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். இது வரை இருந்து வந்த உடல் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வியாபாரம் தொழில் செய்யப்பட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

தனுசு

இந்த சேர்க்கையால் தனுசு ராசிக்காரர்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையக் கூடிய யோகம் உண்டு. குறிப்பாக திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடக் கூடிய யோகம் வரும். இது வரை இருந்து வந்த அனைத்து சிக்கலில் இருந்தும் விடுபடுவீர்கள். உங்களுடைய நல்ல காலம் ஆரம்பித்து விட்டது.

துலாம்

ராகு சுக்கிரன் சேர்க்கையினால் துலாம் ராசிக்காரர்கள் வேலை தொழில் வியாபாரம் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடையப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த காரியங்கள் அனைத்தும் எளிதில் நடந்து வெற்றியைத் தரும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைப்பீர்கள். உங்களை சுற்றிலும் நல்ல சாதகமான சூழ்நிலை அமையும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கும் இந்த இணைவு நல்ல யோகத்தையே தர இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். உறவுகளை தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். பணியிடத்தில் உங்களுடைய திறமைகள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். எதிர்கால திட்டங்களை செம்மையாக செயல்படுத்த முனைவீர்கள்.

மீனம்

ராகு சுக்கிரன் இணைவு இந்த மீன ராசியில் தான் ஏற்படுகிறது இதனால் இவர்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை அமையும். பணியிடங்களில் நல்ல உயர் பதவியை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும் பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்காது. பணவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவானால் யோகம் பெறும் ராசிகள்

ராகு சுக்கிரனின் இணைவால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் இந்த ஐந்து ராசிக்காரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது அவரவர் கிரக சூழ்நிலை குறித்தே தீர்மானிக்கப்படுகிறது. இதிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற இந்த கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -