சூரிய பகவானால் யோகம் பெறும் ராசிகள்

suriyan astrology
- Advertisement -

நவகிரகங்களில் குறுகிய காலத்தில் இடமாற்றம் செய்யக் கூடிய கிரகங்களில் சூரிய பகவானும் ஒருவர். இவர் நவகிரகங்களிலே தலைவனாக கருதப்படுகிறார். ஒரு ராசியில் சூரிய பகவானுடைய சஞ்சாரம் நவகிரகங்களில் மிக முக்கியமான இடம் மாற்றமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 15ஆம் நாள் சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். இதனை வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த சூரிய பகவானாவர் அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசிக்குள் நுழையவிருக்கிறார். ஏற்கனவே இந்த ராசியில் சனிபகவான் வீற்றிருக்கிறார். இந்த ரெண்டு ராசிகளின் இணைவானது 12 ராசிகளுக்கும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் இதில் நற்பலன்களை பெறுகிறார்கள். அந்த ராசிக்காரர்களை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சூரியனின் இடமாற்றத்தால் யோகம் பெறும் ராசிகள்

 

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களின் கிரக அதிபதியே சூரிய பகவான் தான். அத்தகைய ராசிக்கு சூரிய பகவானால் பலவிதமான நன்மைகள் ஏற்பட போகிறது. திருமண ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் நல்ல லாபம் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -

தனுசு ராசி

இந்த ராசிக்காரர்களுக்கும் சூரிய பகவானின் இத்தகைய இடப்பெயர்ச்சியானது சாதகமாகவே அமைந்துள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை போன்றவை அதிகரிக்க கூடிய காலம் இது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் திடீரென்று உங்களை தேடி வரும்.

கும்ப ராசி

இந்த ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதாலும் சூரிய பகவான் இந்த ராசிக்குள்ளே நுழைவதாலும் இவர்களுக்குள்ளும் பல நல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும் காலம் இது. படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவர்களுக்கு சனி பகவானின் தாக்கம் இருந்தாலும் சூரியனின் இந்த பெயற்சியானது நற்பலன்களை தருவதாகவே அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதைகள்

மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டவையே. இவற்றிலும் அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனில் பயன்படுத்தி பலன் அடையுங்கள்

- Advertisement -