இந்த கோஸ் பொரியலை கல்யாண் வீ ட்டு ஸ்டைலில் வெள்ளை வெளேர்னு பார்க்கும் போதே சாப்பிடற மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க, கோஸ் பொரியலே சாப்பிடாதவங்களா கூட சுண்டி இழுத்தது சாப்பிட வைக்கும்.

- Advertisement -

இந்த கோஸ் பொரியல் பொருத்த வரையில் நாம் வீட்டில் எப்படி செய்தாலும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த கல்யாண வீடுகளில் கொடுக்கும் கோஸ் மட்டும் பிடிக்காதவர்கள் கூட கொஞ்சமாவது சாப்பிடுவார்கள். என்னா அது பார்க்கும் போதே வெள்ளை வெளேரென்று சாப்பிட ஆசையை தூண்டும் வகையில் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் சுவையும் நன்றாகவே இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அந்த கல்யாண வீட்டு கோஸ் பொரியலை எப்படி நம் வீட்டில் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கோஸ் -1/2 கிலோ, வெங்காயம் பொடியாக நறுக்கியது -1, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -3, சிறு பருப்பு – 100 கிராம், தேங்காய் துருவியது – 3 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

இந்த பொரியல் செய்வதற்கு பாசிப்பருப்பை அரைமணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கோஸையும் நல்ல பொடியாக நறுக்கி அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து சூடானவுடன், தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதை தேங்காய் எண்ணெயில் செய்யும் போது தான் ருசி நன்றாக இருக்கும். எண்ணெய் காய்ந்தவுடன் சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்த பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இரண்டையும் சேர்த்து லேசாக வதங்கிய பிறகு வெங்காயத்தையும் இதில் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் அதிகம் வதங்க வேண்டியதில்லை லேசாக கண்ணாடி பதம் வரும் வரை வதங்கினால் போதும். அதன் பிறகு ஊற வைத்த பாசிப்பருப்பை அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் பிறகு அலசி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடித்த கோஸையும் இத்துடன் சேர்த்து உப்பையும் சேர்த்த பிறகு லேசாக ஒரு முறை கலந்து விட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். பத்து நிமிடம் வரை இது லோ ஃபிலிமில் வேகட்டும்.

இந்த பொரியலை பொருத்தவரையில் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து தான் சமைக்க வேண்டும் அப்போது தான் எந்த பொருளும் அதிகம் வதங்கி நிறம் மாறாமல் வெள்ளை நிறத்தில் பொரியல் பார்க்க அழகாக இருக்கும். பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்றாக கலந்து விடுங்கள் இதற்குள்ளாகவே அனைத்தும் வெந்து இருக்கும் ஒரு வேளை நீங்கள் வடித்து எடுத்த பிறகும் தண்ணீர் இருந்தால் இன்னும் இரண்டு நிமிடம் லேசாக வதக்கிக்கு தண்ணீர் வற்றியதும் இறக்கி விடுங்கள்.

- Advertisement -

அடுப்பை அணைத்த பிறகு தேங்காயை துருவலை இதன் மேல் சேர்த்து கொஞ்சம் கொத்தமல்லி தழைகளையும் போட்டு கலந்து பரிமாறுங்கள்.இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம் தான். ஆனால் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து நிறம் மாறாமல் பார்த்து செய்ய வேண்டும் அதை மட்டும் கொஞ்சம் கவனமாக செய்து விட்டால் போதும் கல்யாண வீடுகளில் கொடுக்கும் கோஸ் பொரியலை போலவே அவ்வளவு சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஸ்டார் ஹோட்டல் குக் கூட இவ்வளவு அருமையா பேபி கார்ன் செட்டிநாடு கிரேவி வைக்க மாட்டாரு. செட்டிநாடு ஆட்சி கைப்பக்குவத்தில் ரெசிபி உங்களுக்காக.

நீங்களும் இனி உங்கள் வீட்டில் எப்போது கோஸ் பொரியல் செய்தாலும் இது போல செய்து கொடுத்து பாருங்க யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்.

- Advertisement -