இந்த தட்டை செய்ய 1 கப் கோதுமை மாவு போதும். சட்டுனு மொறுமொறு ஸ்நாக்ஸ் ஈஸியா செஞ்சிடலாம்.

thattai2
- Advertisement -

வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து சுலபமான முறையில் தட்டை எப்படி சுடுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. பூரி சுடுவது போல சுட்டு எடுத்து விடலாம். வாங்க அந்த ஈஸி ரெசிப்பி தெரிஞ்சுக்குவோம். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம்.

thattai2

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப் (250 கிராம்), தேவையான அளவு உப்பு, தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், சீரகப் பொடி – 1/4 ஸ்பூன், ஓமம் – 1/2 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். (ஓமம், கஸ்தூரி மேத்தி இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக நுணுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். கஸ்தூரிமேத்தி உங்கள் வீட்டில் இல்லை என்றால், கறிவேப்பிலையை மிக பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.)

- Advertisement -

அடுத்தபடியாக இந்த மாவில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

thattai

சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து இந்த மாவினை, நான்கு பாகங்களாக அல்லது ஐந்து பாகங்களாக பிரித்து உருண்டை செய்து கொள்ளுங்கள். ஒரு உருண்டையை எடுத்து கோதுமை மாவில் பிரட்டி, சப்பாத்தி பலகையின் மீது வைத்து சப்பாத்தி தேய்பதை விட கொஞ்சம் மெல்லிசா தேய்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு சப்பாத்தி போல தேய்த்து வைத்திருக்கும் மாவின் மேலே, ஃபோர்க் ஸ்பூனில் ஓட்டைகளைப் போட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு உங்களுடைய வீட்டில் சிறிய அளவில் கூர்மையான டம்ளர் கிண்ணி, மூடி எது இருந்தாலும் அதை வைத்து திரட்டிய மாவின் மீது அழுத்தி, சிறிய சிறிய தடைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். எல்லா மாவையும் தேய்த்து சிறிய சிறிய வட்டவடிவில் தட்டை போல தேய்த்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

thattai1

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், திரட்டி தயாராக இருக்கும் தடைகளை போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், மொரு மொரு கோதுமை தட்டை தயார். இதை செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டால் 5 நாட்கள் ஆனாலும் வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தினமும் 2 கொடுத்தால்கூட நிறைவான ஸ்நாக்ஸாக இருக்கும்.

thattai2

பின்குறிப்பு: சப்பாத்தி போல மாவை திரட்டிய பின்பு, ஃபோர்ஸ் ஸ்பூனை வைத்து சிறிய சிறிய ஓட்டைகளை போடவில்லை என்றால் இந்த தட்டைகள் பூரி போல் உப்பி வந்துவிடும் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -