உங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி வளமை பெருக இம்மந்திரம் துதியுங்கள்

gowri

உலகம் அனைத்துமே சக்தியின் ஆற்றலால் தான் செயல்படுகிறது என்பது நவீன விஞ்ஞானிகள் மற்றும் ஆன்மீகத் ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் இருக்கின்றது. ஆனால் சிலருக்கு இந்த கஷ்டங்களே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. வேண்டும் பக்தர்களின் குறையை விரைந்து தீர்க்கும் தெய்வமாக கௌரி தேவி இருக்கிறார். அந்த கௌரி தேவிக்குரிய இந்த எளிய மந்திரத்தை துதிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

MathuraKaliamman

கௌரி தேவி மந்திரம்

கௌம் கௌரிமூர்த்தாயே நமஹ

சக்தியின் அம்சமான கௌரி தேவிக்குரிய மந்திரம் இது இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு, மனதில் சக்தி தேவியை தியானித்து 108 முறை உச்சரிப்பது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, பழம் நைவேத்தியம் வைத்து, தூபங்காட்டி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிப்பதால் குழந்தைப் பேறு இல்லாமல் தவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் தொடர்ந்து துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படும் நிலை மாறி வளமும், மகிழ்ச்சியும் உண்டாகும். நெடுநாட்களாக நிறைவேறாமல் தாமதமான விடயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

Amman

நாம் உலகில் காணும் அனைத்துமே சக்தியாகிய அம்பாளின் வடிவமாகவே இருக்கிறது. சக்தி தேவியின் பலவகையான தோற்றங்களில் ஒன்று தான் கௌரிதேவி வடிவமாகும். கௌரி என்றால் உயிராற்றல் தரவல்லது என்கிற ஒரு பொருள் உண்டு. உலகில் அனைத்து வகையான உயிரினங்களின் உயிர் ஆற்றலாக கௌரி தேவி இருக்கிறாள். அந்த கௌரி தேவிக்குரிய இந்த மந்திரத்தை மனம் ஒன்றே படிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் வாழ்வில் கௌரி தேவியின் அருளால் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
எதிரிகள், செய்வினை பாதிப்புகளை நீக்கும் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview”
Here we have Gowri devi mantra in Tamil. It is also called as Sakthi mantras in Tamil or Amman mantras in Tamil or Kastangal neenga manthiram in Tamil or Kulanthai bakkiyam pera manthiram in Tamil.