கிரக தோஷம் நீங்க பரிகாரம்

graga dosham
- Advertisement -

ஒருவருக்கு ஜாதகம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் அவர் வாழும் வீட்டிற்கும் கிரகங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. எப்படி ஜாதகத்தில் கட்டம் போட்டு கிரக நிலைகள் எந்தெந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோமோ அதே போல் தான் ஒருவர் வாழும் வீட்டில் இருக்கக்கூடிய கிரகங்களின் சூழ்நிலையையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அப்படி நாம் எதையும் அறியாமல் வீட்டை கட்டி விட்டால் கிரக தோஷம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த கிரக தோஷத்தால் வீட்டில் எந்தவித நன்மையும் நடைபெறாமல் சண்டை சச்சரவுகள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகளும், முன்னேற்றம் என்பதே ஏற்படாத சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட கிரக தோஷத்தை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நவகிரகங்களை தான் நாம் கிரகங்கள் என்று கூறுகிறோம். இந்த நவகிரகங்களின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்ற இறக்கங்களும் தோல்விகளும் நஷ்டங்களும் சந்தோஷமும் இன்று பலவகையான பிரச்சினைகளையும் சந்தோஷங்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இது ஒருவர் மனிதனுக்கு மட்டும் பொருந்தியது கிடையாது.

நாம் வாழும் வீட்டிற்கும் பொருந்தியதாகவே திகழ்கிறது. ஆலயத்திற்கு செல்லும் பொழுது நமக்கு மன அமைதி ஏற்படுவதற்கு காரணம் அங்கு இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்பு. அதே கிரக நிலைகளின் அமைப்பு நம் வீட்டிலும் இருந்தால் நம் வீடும் ஆலயம் ஆகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அப்படி நம் வீட்டில் இருக்கக்கூடிய கிரக தோஷத்தை நீக்கி சுபிக்ஷத்தை உண்டாக்குவதற்குரிய எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நமக்கு ஒரு மஞ்சள் நிற துணி வேண்டும். பிறகு நவதானியங்கள் வேண்டும். இந்த நவதானியங்களை மஞ்சள் நிற துணியில் கொட்டி இதனுடன் பச்சை கற்பூரம், வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து வைத்து மூட்டையாக கட்டி நிலை வாசலின் மேல் வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பாக செய்துவிடுவது நல்லது.

பிறகு இந்த மூட்டைக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாம் எப்படி சுவாமி படங்களுக்கு பூக்களை போடுகிறோமோ அதே போல் இந்த மூட்டைக்கும் பூக்களை வைக்க வேண்டும். அதேபோல் தினமும் நாம் சாமி கும்பிடும் போது ஊதுபத்தி சாம்பிராணி காட்டுவது போல் இந்த மூட்டைக்கும் காட்ட வேண்டும். இந்த மூட்டையை வாரத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் சிறப்பு அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும்.

- Advertisement -

இதில் இருக்கிற நவதானியங்களை பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் தானமாக வழங்கி விட வேண்டும். பச்சை கற்பூரம் கரைந்து விடும் என்பதால் நாம் புதிதாக வைத்துக் கொள்ளலாம். வெட்டிவேரையும் துணியையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இப்படி நாம் நிலை வாசலில் கட்டி இதற்கு சாம்பிராணி தூபம் தினமும் காட்டும் பொழுது இதில் இருக்கக்கூடிய நவதானியங்களின் அருளால் வீட்டில் இருக்கக்கூடிய கிரக தோஷங்கள் என்பது நீங்கும். பச்சை கற்பூரம் மற்றும் வெட்டிவேரின் மகிமையால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகள் உண்டாகும். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய ஏற்ற வேண்டிய தீபம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் பல நன்மைகள் உண்டாகுவதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவி வீடு கோவிலாக திகழும்.

- Advertisement -