- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கிராமத்து சுவையில் இப்படி பக்குவமான சின்ன வெங்காய காரக் குழம்பை ஒரு முறை செய்து சுடச்சுட...

கிராமத்து சுவையில் இப்படி பக்குவமான சின்ன வெங்காய காரக் குழம்பை ஒரு முறை செய்து சுடச்சுட சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுங்கள். நாவில் நீர் சொட்டச் சொட்ட இதன் சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதேனும் ஒரு குழம்பு வகையை தினமும் செய்வதுண்டு. அதிலும் சாம்பார் மட்டும் கார குழம்பை தான் அடிக்கடி பலரது வீட்டிலும் செய்து வைப்பார்கள். ஏனென்றால் இதனை செய்வதற்கு தான் அதிக அளவு காய்கறி தேவைப்படுவதில்லை. மசாலாவும் சேர்க்க தேவையில்லை. ஆனால் இப்பொழுது செய்யும் குழம்கள் எல்லாம் அந்த அளவிற்கு சுவையாக இருப்பதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் செய்யக்கூடிய இந்த சின்ன வெங்காய கார குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனை அவர்கள் மிகவும் பக்குவமான முறையில் சமைப்பார்கள். வாருங்கள் அதே சுவையில் உங்கள் வீட்டிலேயும் இந்த சுவையான வெங்காய கார குழம்பை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, புளி பெரிய – நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் – 100 கிராம், பூண்டு – 10 பல், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பத்து நிமிடம் கழித்து நன்றாக கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து வைக்க வேண்டும். பிறகு பூண்டையும் தோலுரித்து இரண்டாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இரண்டாக நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். மிளகாய்தூள் அனைத்தும் எண்ணெயிலேயே சிவந்து வரும் வரை நன்றாக கலந்து விட்ட பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்து சற்று கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். இந்தப் பக்குவத்தில் வரும்பொழுது கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். குழம்பு சிறிது நேரம் நன்றாக கொதித்து முடித்த பின்னர் இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காய காரக் குழம்பு தயாராகிவிட்டது.

சற்று முன்